பெங்களூரு வாசிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. நியாயமான கட்டணத்தில் ஆட்டோ.. தொழிற்சங்க ஆதரவுடன் ஆப் அறிமுகம்!
பெங்களூர்: கர்நாடகாவில் தொழிற்சங்க ஆதரவுடன் ஏற்கெனவே ஆட்டோக்களுக்கான ஆப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு ஆப் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
நகரங்களில் கால் டாக்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியதிலிருந்து ஆட்டோக்களுக்கான மவுசு குறைய தொடங்கியது. இந்த சூழலில்தான் ஆட்டோக்களுக்கும் ஆப்கள் வரத் தொடங்கின. ஆப்கள் மூலம் ஆட்டோ சேவைகளுக்கான கட்டணம் வெகுவாக குறைந்தது. இரண்டு கி.மீ தூரத்திற்கு ரூ.200 வசூலிக்கப்பட்ட நிலைமை மாறியது. இருப்பினும் இந்த ஆப் மூலம் கிடைக்கும் பணம், முழுமையாக ஓட்டுநர்களுக்கு சேராதது ஒரு குறையாக இருந்தது.

இப்படி இருக்கையில்தான் தொழிற்சங்க ஆதரவுடன் ஆப்கள் வரத்தொடங்கின. கர்நாடகாவில் நம்ம யாத்ரி எனும் ஆப் இந்த வகையில் செயல்பட்டு வருகிறது. இதில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே பெறப்படும். இந்த ஆப்-க்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கிய நிலையில் இன்று இதேபோல மற்றொரு ஆப் அறிமுகமாகியுள்ளது.
'நகரா மீட்டர் ஆட்டோ ஆப்' எனும் இந்த ஆப் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. கர்நாடகா மாநில ஓட்டுநர்கள் கவுன்சில், அக்னிபு டெக்னாலஜிஸ் இணைந்து இந்த ஆப்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. இது குறித்து தொழிற்சங்கங் நிர்வாகிகள் கூறுகையில்,
"இந்த ஆப் மூலம் நியாயமான விலையில் பயணிக்க முடியும். முதல் இரண்டு கி.மீக்கு ரூ.30 எனவும் அடுத்தடுத்து ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.15 என வசூலிக்கப்படும். ஓலா, உபெர் மற்றும் ரேபிடோ ஆகியவற்றுக்கு மாற்றாக இந்த புதிய செயலி இருக்கும். மட்டுமல்லாது ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையேயான உறவை இந்த ஆப் மேம்படுத்தும்.
பல சமயங்களில், அதிக தூரம் சென்றாலும், ஓட்டுநர்கள் நியாயமான கட்டணத்தைப் பெறுவதில்லை. கூடுதலான கட்டணத்தையே பெறுகிறார்கள். எனவே மக்கள் ஆப்களை நாட தொடங்கியுள்ளனர். இப்படியாக ஓலா, ஊபர் உள்ளிட்டவை வளர்ந்திருக்கின்றன. இந்த ஆப் மூலம் ஓட்டுநர்களுக்கு நியாயமான தொகை சேர்வதில்லை. எனவே தொழிற்சங்கள் இணைந்து 'நகரா மீட்டர் ஆட்டோ ஆப்'-ஐ உருவாக்கியுள்ளன. இந்த ஆப்களில் இணைவதற்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆட்டோக்களில் மீட்டர்களை பயன்படுத்தவது குறித்து மாநில போக்குவரத்து துறை வழிகாட்டுதல்களை ஏற்கெனவே கொடுத்திருக்கிறது. இந்த வழிக்காட்டுதல்படி மீட்டர்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்ட ஆட்டோக்களை மட்டுமே இந்த ஆப்-ல் இணைக்க முடியும். மற்ற ஆப்களில் இருப்பதை போலவே ஓட்டுநர்களின் நடவடிக்கை மற்றும் பயணம் குறித்து புகார்களையும், கருத்துக்களையும் தெரிவிக்க ஆப்ஷன்கள் இந்த App-லும் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஓடிபி மூலம் பயணத்திற்கான அனுமதி பெறப்படுகிறது. பயணத்திற்கான கட்டணத்தை நேரடியாகவும், யுபிஐ பணபரிவர்த்தனை மூலமும் செலுத்தலாம்" என்று கூறியுள்ளார்.
ஆப் செயல்படும் விதம்: மற்ற ஆப்களை போலவே பயணிகள் ஆட்டோவுக்கு ரெக்வஸ்ட் கொடுக்க வேண்டும். அதை ஓட்டுநர் ஏற்றுக்கொண்டால் பயணிக்கு ஓடிபி வரும். ஆட்டோவில் ஏறும்போது ஓடிபியை சரிபார்த்து பயணம் தொடங்கப்படும். பயணம் தொடங்கப்படும்போது மீட்டர் இயக்கப்படும். பயண இறுதியில் மீட்டரில் காட்டப்படும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications