அவ்ளோதான் அரசியல் சட்டம்! சனாதன தர்மம்தான் இனி 'இந்திய சாசனம்'.. 'அலாரம்' அடிக்கும் சித்தராமையா!
பெங்களூர்: இந்தியாவின் அரசியல் சட்டத்தை அழித்துவிட்டு சனாதன தர்மத்தையே இனி இந்திய அரசியல் சாசனமாக பாஜக நடைமுறைப்படுத்தும்; அப்படி நடைமுறைப்படுத்தினால் 90% இந்தியர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிற அபாயம் உருவாகும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.
கர்நாடகாவில் நேற்று அரசியல் சாசன முகப்பு வாசிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பெங்களூர் விதான சவுதாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பெருமளவு பங்கேற்றனர். விதான் சவுதா முன்பாக அனைவரும் அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை வாசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதாவது: போபாலில் பேசிய பிரதமர் மோடி, சனாதன தர்மத்தை ஆதரித்து பேசுகிறார். சனாதன தர்மம்தான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் என்கிறார்.
இந்தியாவின் அரசியல் சட்டம் ஒழிக்கப்பட்டு இவர்கள் பேசுகிற சனாதன தர்மம்- மனு தர்மம் அமலுக்கு வந்தால் தேசத்தின் 90% மக்கள் அடிமைகளாக்கப்படுவர். இதற்கான சதிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். சமத்துவ சமுதாயம், மதச்சார்பற்ற நிலைப்பாடு அடிப்படையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது.
ஜனநாயக கோட்பாடுகள் புத்தர், பசவண்ணர் காலத்தில் இருந்து இந்திய மண்ணில் நிலை பெற்ற ஒன்று. அரசியல் சாசனத்துக்கு எதிரான சக்திகளின் சதிகளை இணைந்து முறியடிப்போம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications