மத்திய அமைச்சர்னு கூட பாக்கலையே.. குமாரசாமிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் அனுமதி மறுப்பு - பூட்டு
பெங்களூர்: மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி ஓய்வெடுக்க அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற நிலையில் கதவுக்கு பூட்டுப்போடப்பட்டு இருந்தது. கதவை திறக்க கூறியும் அங்கிருந்த பணியாளர்கள் திறக்காததால் எச்டி குமாரசாமி 15 நிமிடங்கள் வரை காத்திருந்து புறப்பட்டு சென்ற நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் 2வது மகன் எச்டி குமாரசாமி. ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கர்நாடகா மாநில தலைவராக உள்ளார்.

கர்நாடகா முன்னாள் முதல்வராக இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் குமாரசாமி கேபினட் அமைச்சராக உள்ளார். அவர் கனரக தொழில்துறையை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் குமாரசாமி கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடுவில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
"முதல்வரிடம் வென்ற டிகே சிவக்குமார்".. ராமநகர் இனி பெங்களூர் தெற்கு என மாற்றம்! அமைச்சரவை ஒப்புதல்
சாமி தரிசனத்தை முடித்த எச்டி குமாரசாமி கோவிலில் இருந்து நஞ்சன்கூடுவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார். அப்போது அரசு விருந்தினர் மாளிகையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்ததும் குமாரசாமியுடன் வந்திருந்த நிர்வாகிகள் பூட்டை திறக்கும்படி அங்கிருந்த பணியாளர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் பூட்டு சாவி இல்லை என்று கூறிவிட்டனர். மேலும் சாவி யாரிடம் உள்ளது? என தெரியவில்லை என்று கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குமாரசாமியின் ஆதரவாளர்கள் பணியாளரிடம் வாக்குவாதம் செய்தனர். மத்திய அமைச்சர் குமாரசாமி இன்று வருவதாக கூறியும் அரசு விருந்தினர் மாளிகை திறக்கப்படவில்லை . இது அவரை அவமதிக்கும் செயல் என்று காட்டமாக கூறினர்.இதையடுத்து 15 நிமிடங்கள் வரை காரில் காத்திருந்த குமாரசாமி டென்ஷனாகி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துண்டு துண்டாகும் பெங்களூர்.. 10 மாநகராட்சியாக விரைவில் பிரிப்பு? புது மசோதாவுக்கு ஒப்புதல்
இதற்கிடையே தான் இந்த சம்பவத்தின் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மைசூர் வளர்ச்சி ஆணையமான ‛மூடா’வில் முறைகேடு நடந்துள்ளது என்று ஆளும் காங்கிரஸ் மீது எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. கர்நாடகாவில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணியில் உள்ள நிலையில் ‛மூடா’ முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதயாத்திரையை தொடங்க உள்ளனர். இதனால் தான் விருந்தினர் மாளிகையை எச்டி குமாரசாமிக்கு திறக்கவில்லை என்று ஜேடிஎஸ் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications