பரதநாட்டிய டான்சரிடம் அத்துமீறிய கணவர்.. இயற்கைக்கு மாறான உறவு.. கர்நாடகா கோர்ட்டின் அதிரடிய பாருங்க
பெங்களூர்: மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமல்ல என்று சில மாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் ஹைகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.. நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது 3 மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில், கர்நாடகத்தில் வழக்கு ஒன்றில் தரப்பட்டுள்ள தீர்ப்பு கவனம் பெற்று வருகிறது.
மலக்குடலில் துளை போன்ற நோயால் பாதிக்கப்பட்டார்.. பிறகு சிகிச்சை தந்தும் பலனின்றி அந்த பெண் இறந்துவிட்டார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, "இயற்கைக்குற்பட்ட பாதிப்பால்தான் அவர் உயிரிழந்தார்" என்று குறிப்பிட்ட விசாரணை நீதிமன்றம், உயிரிழந்த பெண்ணின் கணவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, கணவனுக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும் விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து பிலாஸ்பூர் ஐகோர்ட்டில் கணவர் அப்பீல் செய்தார்..
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், "2013-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 315-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் செய்கை குற்றமாக கருதமுடியாது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன், கணவர் செய்யும் எந்த ஒரு பாலியல் செயலும், பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது.
இயற்கைக்கு மாறான உடலுறவு
அதுமட்டுமல்ல, இயற்கைக்கு மாறான உடலுறவு கொலைக்கு சமமானதல்ல. மனைவி 15 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், எந்த உடலுறவையும், எந்த சூழ்நிலையிலும் கணவரின் பாலியல் தொல்லை என்று சொல்ல முடியாது. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தது.
மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமல்ல என்ற நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது 3 மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பேசுபொருளாகியிருந்தது.
பரதநாட்டிய கலைஞர்
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒரு வழக்கில் தரப்பட்டுள்ள தீர்ப்பு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. பெங்களூரு நகரில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. பரத நாட்டிய கலைஞராக உள்ளனர்.. பல நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு, கடந்த 2023, ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்துள்ளது.. ஆனால், கல்யாணம் ஆனதிலிருந்தே கணவருடன் கருத்து வேறுபாடு அதிகமாக இருந்து வந்துள்ளது.. இதனால், தம்பதி இருவருமே அடிக்கடி தகராறும், சண்டையுமாக இருந்து வந்துள்ளனர்..
இயற்கைக்கு மாறான உறவு
இதில், இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு, கணவர் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன், பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்று தடை போட்டுவிட்டாராம். கணவர், மாமனார், மாமியார் என அனைவருமே தனக்கு டார்ச்சர் செய்வதாக கூறி, கொத்தனூர் போலீசுக்கு சென்றுவிட்டார் அந்த பெண்.
சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. இதனிடையே, தன் மீதும், தன்னுடைய பெற்றோர் மீதும் பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி அந்த கணவர், ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
முறிக்கப்பட்ட கை
இதையடுத்து, அவர் மீதான கிரிமினல் வழக்குக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் மனைவி, அதனை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார்.. அந்த மனு தற்போது விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, "மனுதாரரை அவரது கணவர் இயற்கைக்கு மாறான உறவு கொள்ளும்படி வற்புறுத்தி தொந்தரவு தந்திருக்கிறார்.. அத்துடன் பெண்ணை தாக்கி, அவரது கையையும் முறித்துள்ளார்.. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய கூடாது" என்று வாதிட்டார்.
நீதிபதி அதிரடி தீர்ப்பு
இந்த 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனைவிக்கு கணவர் தொல்லை தந்து, தாக்குதல் நடத்தியிருப்பது நிரூபணமாகி உள்ளது. எனவே, கணவர் மீது பதிவான கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்படாது. இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேசமயம், அந்த பெண்ணின் மாமனாரும், மாமியாரும் எந்த தவறும் செய்யாததால், அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்' என்று உத்தரவிட்டுள்ளார்..
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications