"3000 ஆபாச வீடியோ பிரஜ்வல் ரேவண்ணா" சகோதரர் சூரஜ் மீது ஓரின சேர்க்கை புகார்- பணம் பறிக்க நாடகமா?
பெங்களூர்: தேவகவுடாவின் பேரன்களில் ஒருவரான சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி மீது ஜேடிஎஸ் கட்சித் தொண்டர் ஒருவர் ஓரினச் சேர்க்கை புகார் தெரிவித்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவகவுடாவின் மற்றொரு பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே 3,000 ஆபாச வீடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா அரசியலில் ஜேடிஎஸ் கட்சியானது காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்த நிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் குடும்பத்தின் கட்சி இது. காங்கிரஸ், பாஜக ஆதரவுடன் தேகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராக இருந்துள்ளார். தற்போது மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார் குமாரசாமி.

லோக்சபா தேர்தலின் போது தேவகவுடாவின் மற்றொரு மகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது. ஹாசன் லோக்சபா தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டிருந்தார். ஆபாச வீடியோ வெளியான நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார் பிரஜ்வல். லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் நாடு திரும்பிய பிரஜ்வல் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
தற்போது தேவகவுடாவின் மற்றொரு பேரன் சூரஜ் ரேவண்ணா கர்நாடகா மேல்சபை உறுப்பினர் எம்.எல்.சியாக உள்ளார். சூரஜ் ரேவண்ணா மீது ஜேடிஸ் தொண்டர் ஒருவர் ஓரினச் சேர்க்கை புகார் கொடுத்துள்ளார். சூரஜ் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணா எம்.எல்.ஏ.வும் பிரஜ்வல் வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
ஹாசன் மாவட்டம் அர்க்கல்கோடு தாலுகா கொல்லங்கி கிராமத்தைச் சேர்ந்த சேத்தன் என்ற ஜேடிஎஸ் தொண்டர்தான் சூரஜ் ரேவண்ணா மீது ஓரினச் சேர்க்கை புகார் கொடுத்துள்ளார். சூரஜ் ரேவண்ணா தம்மை ஓரினச் சேர்க்கைக்கு அழைப்பதாகவும் இது பற்றி வெளியே சொல்லாமல் இருந்தால் ரூ5 கோடி தருவதாகவும் ஆசைவார்த்தை காட்டினார் எனவும் சேத்தன் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் சேத்தன் மீது சூரஜ் ரேவண்ணாவின் நெருங்கிய நண்பரான சிவக்குமார் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், சூரஜ் ரேவண்ணாவிடம் மனைவிக்கு வேலை கேட்டு வந்தார் சேத்தன். மனைவிக்கு வேலை வாங்கி தராவிட்டால் பிரஜ்வல் ரேவண்ணாவை ஜெயிலுக்கு அனுப்பியது போல ஓரினச் சேர்க்கை புகார் கொடுத்து சிறைக்கு அனுப்புவேன்; அதனால் தமக்கு ரூ5 கோடி தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ5 கோடி கேட்ட சேத்தன் பின்னர் ரூ1 கோடி வரை இறங்கி வந்ததாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையிலும் சேத்தன், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்












Click it and Unblock the Notifications