கர்நாடகாவில் விழுந்தது முதல் விக்கெட்! அதிகாரி தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா!
பெங்களூர்: கர்நாடகா வால்மீகி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரி சந்திரசேகர் தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் நாகேந்திரா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் நாகேந்திரா.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாகவும் நெருக்கடியாகவும் உருவெடுத்தது வால்மீகி வளர்ச்சி ஆணைய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை. பெங்களூர் வசந்த்நகரில் உள்ளது வால்மீகி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரியாகப் பணியாற்றிய சந்திரசேகர்( வயது 52) ஷிமோகாவில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சந்திரசேகர் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதத்தில், வால்மீகி சமூக வளர்ச்சி ஆணையத்துக்கு மாநில அரசு ரூ187 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆணையத்தின் 3 அதிகாரிகள் ரூ85 கோடியை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி சுருட்டிக் கொண்டனர். இது குறித்து அதிகாரி என்ற முறையில் அவர்களிடம் கேட்டேன். இதற்காக எனக்கு பெரும் தொல்லை கொடுத்தனர். இதனால் மனமுடைந்து நான் தற்கொலை செய்கிறேன் என எழுதி இருந்தார்.
அதிகாரி சந்திரசேகரின் மரணத்தைத் தொடர்ந்து அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, ஜேடிஎஸ் கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால் நாகேந்திரா ராஜினாமா செய்ய மறுத்தார். இதனால் நாகேந்திராவை ராஜினாமா செய்ய கடந்த வாரம் முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இதனை உடனே நாகேந்திரா ஏற்கவில்லை. இந்த நிலையில் நேற்று முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் நாகேந்திரா.
முன்னதாக நாகேந்திரா கூறுகையில், வால்மீகி வளர்ச்சி ஆணைய அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களது கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளது என்கின்றனர். இந்த முறைகேட்டுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை எனக் கூறியிருந்தார்.
-
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications