பெங்களூர் டூ ஹைதராபாத் வந்தே பாரத் ரயில்.. ஹைய்யா தூரந்தோ எக்ஸ்பிரஸை விட ஃபாஸ்ட்டா போகுமாமே?
பெங்களூர்: வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் பெங்களூர் டூ ஹைதராபாத் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் எவ்வளவு தெரியுமா.
இந்த ரயில் திட்டத்துடன் 9 வந்தே பாரத் ரயில்களின் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த பெங்களூர் டூ ஹைதராபாத் வந்தே பாரத்தின் உத்தேச திட்டத்தின் படி ஹைதராபாத்தை சேர்ந்த கச்சிகுடா பகுதியிலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும்.

இது சரியாக மதியம் 2 மணிக்கு பெங்களூரின் யஸ்வந்த்பூருக்கு வருகை தரும். அத போல் அங்கிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு ஹைதராபாத்திற்கு (kachegudain) இரவு 11.15 மணிக்கு வருகை தரும்.
இந்த இடைப்பட்ட தூரத்தில் 5 ஸ்டாப்பிங்குகள் உள்ளன. அவை மஹபூப்நகர், கர்னூல் நகரம், ஆனந்தபூர், தோனே, தர்மாவரம் ஆகியவை ஆகும். இந்த பெங்களூர் டூ ஹைதராபாத் ரயில் சேவையானது புதன்கிழமையை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இயங்கும். இந்த வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயிலானது பயணிகளுக்கு பயண நேரத்தை குறைக்கும்.
இதுகுறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தற்போது பெங்களூர் டூ ஹைதராபாத்தை இணைக்க 20 ரயில் சேவைகள் உள்ளன. அவற்றில் சூப்பர் பாஸ்ட், ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், மெயில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவையும் அடங்கும். பெங்களூரிலிருந்து புறப்படும் மேற்கண்ட ரயில்கள் ஹைதராபாத்தின் கச்சிகுடா பகுதியை வந்தடைய 12 மணி நேரம் ஆகிறது. இந்த பயண நேரம் தற்போது வந்தே பாரத் ரயிலில் குறைந்து 8.5 மணி நேரமாக இருக்கும் என்றனர். இது நேற்றைய தினம் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் தெரியவந்தது.
இந்த பெங்களூர் டூ ஹைதராபாத் வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள் இருக்கும். இவற்றை கச்சிகுடா தென் மத்திய ரயில்வே பராமரிக்கும். இந்த ரயிலின் எண் 20704 ஆகும். வழித்தடம் சரியாக சொல்ல வேண்டுமானால் யஸ்வந்த்பூர் டூ கச்சிகுடா. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலால் இரு தொழில்நுட்ப நகரங்களை சேர்ந்த மக்கள் பயனடைவர். பெரும்பாலான ரயில்கள் 10 மணி நேரம் முதல் 13 மணி வரை இந்த வழித்தடத்தில் பயணிக்கிறது. இந்த வழித்தடத்தை பொருத்தமட்டில் இருக்கும் ரயில்களிலேயே விரைவு ரயில் என்றால் அது தூரந்தோ எக்ஸ்பிரஸ்தான். அது 9 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதைவிட 30 நிமிடங்கள் வந்தே பாரத் ரயிலில் குறைவு.
கர்நாடகாவுக்கு மைசூர்- பெங்களூர்- சென்னை, பெங்களூர்- ஹூப்ளி- தர்வாத் ஆகிய இரு வந்தே பாரத் ரயில் சேவைகள் இருக்கும் போது ஹைதராபாத்- பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை மூன்றாவது சேவையாகும். இந்த ரயில் தடம் வட கர்நாடகாவின் ராய்ச்சூர் மற்றும் யாத்கிரி பகுதியையும் இணைத்தால் ஏராளமான மக்கள் பயனடைவார்கள்.
வந்தே பாரத் ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும். இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது. நெடுந்தூரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த வந்தே பாரத் ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications