காவிரி: கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசலைனா... ரஜினிகாந்துக்கு மீண்டும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
பெங்களூர்: காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்காவிட்டால் அவரது திரைப்படங்களை திரையிடவிட மாட்டோம் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு எதிரான காவிரி நதிநீர் போராட்டங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடியவர் வாட்டாள் நாகராஜ். தமிழ்நாட்டுக்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தூண்டிவிடக் கூடியவர் வாட்டாள் நாகராஜ்.

கர்நாடகா பந்த்: தற்போதைய காவிரி பிரச்சனையில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் இணைந்து பெங்களூர் பந்த் போராட்டத்தை நடத்தின. இதில் வாட்டாள் நாகராஜூக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. இதனால் பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் அவர். அத்துடன் தமக்கு வேண்டிய அமைப்புகள் ஆதரவுடன் கர்நாடகா பந்த் போராட்டம் நாளை நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் காவிரி டெல்டா சாராத பகுதி மக்கள் எப்படி ஆதரவு தருவார்கள் என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.
வாட்டாள் நாகராஜ் கைது: அத்துடன் பெங்களூரில் நாள்தோறும் ஏதேனும் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு லைம் லைட்டில் இருக்க விரும்புகிறார் வாட்டாள் நாகராஜ். பெங்களூரில் நேற்று முதல்வர் சித்தராமையா இல்லத்தை முற்றுகையிடும் போராடத்தை வாட்டாள் நாகராஜ் நடத்தினார். ஆனால் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நாளை பந்த் போராட்டம்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வட்டாள் நாகராஜ், காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரை கூட எந்த காரணத்தை சொல்லியும் திறந்துவிடக் கூடாது. கன்னட சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக கர்நாடகா பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
ரஜினிகாந்துக்கு எச்சரிக்கை: நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருந்தாலும் கர்நாடகாவில் இருந்த் போது காவிரி நீரை குடித்தவர். ஆகையால் கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தான் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் பேச வேண்டும். கர்நாடகாவில் வறட்சி நிலவும் சூழ்நிலையை ரஜினிகாந்த் விளக்க வேண்டும். அப்படி ரஜினிகாந்த் செய்யாவிட்டால் அவரது திரைபப்டங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றார். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் வாட்டாள் நாகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications