கர்நாடகாவில் ஏழை மாணவர்களுக்கு உதவி! ஆதரவு கரம் நீட்டிய வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீரப்பனின் மக்கள் விஜயலட்சுமி ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களை வழங்கியுள்ளார்.
வீரப்பன் மறைவுக்கு பின்னர் அவரது மகள் விஜயலட்சுமி தற்போது பொதுவெளியில் தலைக்காட்ட தொடங்கியுள்ளார். வீரப்பனின் முதல் மகள் வித்தியா ராணி கடந்த 2020ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவருக்கு மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது மகளான விஜயலட்சுமி தற்போது திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். கே.என்.ஆர் மூவிஸ் இயக்கத்தில் ராஜா தயாரித்து அவரே நடித்த படம்தான் 'மாவீரன் பிள்ளை'. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக விஜயலட்சுமி நடித்திருந்தார்.

படத்தின் ட்ரைலர் கடந்த 2021ம் ஆண்டு வெளியான நிலையில் படம் நேற்றுதான் (ஏப்.23) வெளியானது. இந்நிலையில் பெங்களூரின் காக்ஸ் டவுன் பகுதியில் பாரதி நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்த விஜயலட்சுமி, அங்கு வந்த சுமார் 300 ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களை வழங்கினார். அதேபோல கன்னடத் திரையுலக பிரபலமான டாக்டர் ராஜ்குமாரின் சிலைக்கு தனது கணவர் சபரீஷ் உடன் சென்று விஜயலட்சுமி மாலை அணிவித்தார்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் விஜயலட்சுமியின் இந்த நடவடிக்கைகள் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "மாணவர்களுக்கு உதவுவதற்காகவே விஜயலட்சுமி வந்திருந்தார். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது" என்று கூறியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications