கர்நாடகா: முதல்வர் பதவியில் டிகே சிவக்குமார்... ஒக்கலிகா மடாதிபதிகள் வரிந்து கட்டி ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியை டிகே சிவக்குமாருக்கு வழங்க வேண்டும் என ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதிகள் காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி உள்ளனர்.

கர்நாடகா தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பெரும் பலத்துடன் ஆட்சி அமைக்கப் போகிறது காங்கிரஸ்.

Vokkaliga Gowda seers back DK Shivakumar candidature for Karnataka Chief Minister

காங்கிரஸின் புதிய முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் பரந்துபட்ட ஆதரவு பெற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையாவை முதல்வராக்குவதில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருதரப்பினர் தீவிரமாக இருக்கின்றனர். இன்னொரு பக்கம் டிகே சிவக்குமாருக்கும் ஆதரவு அதிகமாக உள்ளது.
இதனால் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடமே இறுதி முடிவு எடுக்க உள்ளது.

அதேநேரத்தில் சித்தாராமையா, டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் இருவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டிகே சிவக்குமாரின் பிறந்த நாள் இன்று. இதனையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகளிலும் முதல்வர் முழக்கம் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதில் ஒக்கலிகா கவுடா, முஸ்லிம்கள் வாக்குகள் மிக முக்கியமானவை. ஒக்கலிகா கவுடா ஜாதியினர் காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடியவர்கள். இம்முறை காங்கிரஸுக்கு கூடுதல் வாக்குகளை கொடுத்தனர். இதனால் பழைய மைசூர் பகுதியில் காங்கிரஸ் பிரம்மாண்ட வெற்றியை அறுவடை செய்தது. அதேபோல மஜதவுக்கு வாக்களித்த முஸ்லிம்கள் இம்முறை கணிசமாக காங்கிரஸ் பக்கம் திரும்பினர். காங்கிரஸ் கட்சியில் 9 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இதனிடையே டிகே சிவகுமாரை கர்நாடகா ஒக்கலிகா கவுடா மடாதிபதிகள் நேற்று முதல் சந்தித்து வருகின்றனர். டிகே சிவகுமாரையே முதல்வராக்க வேண்டும் எனவும் ஒக்கலிகா மடாதிபதிகள் காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தியும் வருகின்றனர். ஆனால் டிகே சிவக்குமார் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதையே காரணம் காட்டி காங்கிரஸ் மேலிடம் அவருக்கு முதல்வர் பதவியை மறுக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது ஒக்கலிகா கவுடா ஜாதியினரை அதிருப்தி அடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+