இது யாருமே தராத சூப்பர் கிப்ட்.. ஊழியர்களுக்கு பெங்களூரு நிறுவனம் தந்த இன்ப அதிர்ச்சி
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று , உலக தூக்கத் தினத்தையொட்டி ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
மார்ச் 17ஆம் தேதி உலக தூக்க தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் ஆகும். நமது உடல்நலம், மனநலம் போன்றவற்றுக்கு உணவு, உடற்பயிற்சி போன்றவை எந்தளவு அவசியமோ தூக்கமும் அதே அளவு மிகவும் முக்கியம். எவ்வித தடங்கலும் இல்லாமல் தினமும் வழக்கமான நேரத்தில் தூங்கினால் நோய்கள் வருவதை குறைக்கும்.
குறிப்பாக நாள்பட்ட நோய்கள், உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை குறைக்கும் என்று 'வோர்ல்ட் ஸ்லீப் டே' நிறுவனம் ஒரு ஆய்வில் கூறியுள்ளது. உலகம் முழுவதும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 கோடியாக இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.

தூக்கம் வரவில்லை
உறங்குவதற்கு கூட நேரமில்லாமல் தவிக்கும் மக்கள் ஒரு பக்கம், தூக்கமே வராமல் தவிக்கும் மக்கள் மறுபக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில் உறங்குவதற்காகவே வேலையிலிருந்து ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் எப்படி இருக்கும்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? சரி, இவை ஒரு சாதாரணமாக வேலைக்கு போறவங்க செய்யக்கூடிய கற்பனை செய்யக்கூடிய காட்சிகள். இதை பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் நினைவாக்கி உள்ளது.

தூங்கலாம்
மார்ச் 17ம் தேதி உலக உறக்க தினம் கொண்டாடப்படுகிறது. உலக உறக்க தினத்தை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு ஒரு நாள் தூங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஒரு கனவை நனவாக்கியுள்ளது. வீட்டு அலங்காரப் பொருட்களை முதன்மையாகக் கையாளும் Wakefit என்ற நிறுவனம், அதன் ஊழியர்களை ஒரு நாள் தூங்குவதற்கு மட்டும் விடுப்பு எடுக்க சொல்லி மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.

ஒரு நாள் ஓய்வு
Wakefit நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துகொண்டு, "உலக தூக்க தினத்தை கொண்டாடும் வகையில், அனைத்து Wakefit ஊழியர்களுக்கும் மார்ச் 17, 2023 அன்று ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது - மேலும் ஒரு நீண்ட வார இறுதியில், அவர்களுக்கு புத்துணர்ச்சி பெறுவதற்கு இது சரியான வாய்ப்பு. மிகவும் தேவையான ஓய்வு" என்று குறிப்பிட்டுள்ளது.

எப்படி பெறுவது
மின்னஞ்சலில், அந்நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச் 17 ஐ விருப்ப விடுமுறையாக வழங்குவதாக தெரிவித்து இருந்தது.. ஆர்வமுள்ள ஊழியர்கள் HR போர்டல் மூலம் மற்ற விடுமுறைகளைப் போலவே விடுமுறையைப் பெறலாம் என்று கூறியிருந்தது.

விடுமுறை
மின்னஞ்சலில் Wakefit நிறுவன கூறியிருந்தாவது: Wakefit அதன் அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப விடுமுறையாக மார்ச் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வதேச தூக்க தினத்தை கொண்டாடும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தூக்கத்தை விரும்புவோராக, நாங்கள் தூக்க நாளை ஒரு பண்டிகையாகக் கருதுகிறோம், குறிப்பாக அதுவும் வெள்ளிக்கிழமையில் வரும் போது! HR போர்டல் மூலம் மற்ற விடுமுறை நாட்களைப் போலவே இந்த விடுமுறையையும் நீங்கள் பெறலாம். வேலை நேரத்தில் மக்கள் தூக்கம் வருவது 21% அதிகரித்துள்ளது, சோர்வாக எழுந்திருப்பதில் 11% அதிகரித்துள்ளது. தூக்கமின்மையின் பரவலைக் கருத்தில் கொண்டு, உறக்கத்தின் பரிசை விட தூக்க நாளைக் கொண்டாட சிறந்த வழி எது? திங்கட்கிழமை நீங்கள் நன்றாக ஓய்வெடுப்பீர்கள் என்று நம்புகிறேன், சியர்ஸ்!" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications