வீங்கிய கண்கள், காயமடைந்த முகத்துடன்! கோர்ட்டில் ஆஜரான ரன்யா ராவ்! போலீஸால் தாக்கப்பட்டாரா நடிகை?
பெங்களூர்: வீங்கிய கண்களுடனும் முகத்தில் ஆங்காங்கே காயங்களுடனும் நடிகை ரன்யா ராவின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணையின் போது அதிகாரிகள் அடித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடகா மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி கூறுகையில், ரன்யா ராவ் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து முறையாக புகார் பதிவு செய்யும் வரை விசாரணை நடத்த முடியாது என்றார்.

தமிழில் வாகா எனும் படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடிகை ரன்யா ராவ் நடித்திருக்கிறார். இவர் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த போது 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தார். இவரை கடந்த 3 ஆம் தேதி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில் ரன்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் துபாய்க்கு செல்வது குறித்தும் பெங்களூர் திரும்புவது குறித்தும் துபாயில் தங்குவது குறித்தும் ஒரு கும்பல் தனக்கு தெரிவிக்குமாம். அதன் பேரில் அவர் செயல்படுவாராம்.
இவ்வாறு தங்கத்தை கடத்தி கொடுத்தால் ஒரு கிலோவுக்கு ரூ 5 லட்சம் கிடைக்குமாம். இதுவரை தங்கம் கடத்துவதற்காக ரன்யா 45 நாடுகளுக்கு சென்றுள்ளாராம். அதில் கடந்த ஆண்டு துபாய்க்கு மட்டும் 18 முறை சென்றுள்ளாராம்.
ரன்யா கட்டட கலை நிபுணர் ஒருவரை அண்மையில் பெங்களூர் தாஜ் ஹோட்டலில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 மாதங்களில் சிறை சென்றுள்ள ரன்யா ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த மனு மீது விசாரணை நேற்று நடத்தப்பட்டது. அப்போது ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் விசாரணைக்காக தங்களின் காவலுக்கு அனுப்பக் கோரியும் வருவாய் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் வாதம் செய்தனர்.
மேலும் ரன்யாவை காவலில் எடுத்து விசாரித்தால்தான் இந்த கடத்தலில் தேசவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பது கண்டறிய முடியும். ரன்யா ராவின் பாஸ்போர்ட்டில் ஹர்ஷவர்தினி ராவ் என பெயர் உள்ளது. இதையடுத்து நீதிபதி, ரன்யா ராவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி கொடுத்தார்.
இந்த கடத்தலில் அரசியல்வாதிகள் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என சொல்லப்படுகிறது. விசாரணையின் போது பல உண்மைகள் வெளிவரலாம் என கூறப்படுகிறது. ரன்யா ராவுடன் அவரது கணவர் ஜதினும் அடிக்கடி துபாய் சென்றாராம். அவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் ரன்யா ராவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருடைய முகத்தில் காயங்களுடனும் கண்கள் வீக்கத்துடனும் இருந்தார். இது குறித்து ஒரு புகைப்படம் வெளியானது. எனவே விசாரணையின் போது ரன்யா தாக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நீதிபதி கேட்டபோது, ரன்யா ராவ், "இந்த காயங்களும் வீக்கமும துபாய்க்கு செல்வதற்கு முன்பாக ரொம்ப நாளாகவே இருந்து வருகிறது" என்றார். இதையடுத்து ரன்யாவுக்கு சிகிச்சை அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications