வெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு பெங்களூர்.. இந்த வீடியோக்களை பாருங்க தெரியும்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டியது. குறிப்பாகப் பெங்களூரின் வடக்கு பகுதிகளில் மழை அதிகம் பெய்ததால் அங்குப் பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நேற்றிரவு பெங்களூரின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு பெங்களூரில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குப் பாதிப்புகள் மிக மோசமாக உள்ளது.

bangalore weather rain

தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கிய நிலையில், பொதுமக்களால் வெளியே கூட வர முடியவில்லை. அங்கு மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தரப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.

கனமழை: குறிப்பாக நேற்று பெங்களூரின் சவுடேஸ்வரி வார்டு, எலகங்கா, வித்யாரண்யபுரா போன்ற வடக்கு பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சவுடேஸ்வரி பகுதியில் 157 மிமீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து எலகங்கா பகுதியில் 141 மிமீ மழை பெய்துள்ள நிலையில், வித்யாரண்யபுரா பகுதியில் 109 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் ஜக்குரு, கொடிகேஹள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் பெய்த மழையுடன் ஒப்பிட்டால் இது குறைவு தான் என்ற போதிலும், ஏரிக்கரை, ஏரி மீது லேஅவுட் அமைந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பெங்களூரின் பழைய பகுதிகளான பசவனகுடி, மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், ஜெயநகர் போன்ற இடங்கள் பாதிக்கப்படவில்லை. அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு சரியான பகுதியில் திட்டமிட்ட பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லை.. அதேநேரம் ஐடி காலத்திற்கு வந்த பிறகு வளர்ந்த ஏரியாக்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

வீடியோ: இதற்கிடையே பெங்களூர் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் சாலையில் நிறுத்தப்பட்ட கார்கள் கிட்டதட்ட பாதியளவு நீரில் மூழ்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

weather rain

இதைப் பகிர்ந்த நெட்டிசன், "பெங்களூருவில் உள்ள கேந்திரிய விஹார் அடுக்குமாடிக் குடியிருப்புகள் எலகங்கா ஏரியில் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. அதாவது இது மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளம்.. இது நாம் உருவாக்கும் ஒரு பேரழிவு.. இயற்கையைக் குறை சொல்வது சரி இல்லை.. நகரங்கள் மூழ்குவது மழையினால் அல்ல, நமது மோசமான திட்டமிடல் காரணமாகவே நகரங்கள் மூழ்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மோசம்: அடுத்து இந்த வீடியோ பெங்களூர் விப்ரோ சந்திப்பில் உள்ள சர்ஜாபூர் சாலையில் எடுக்கப்பட்டது. சாலையே கண்களில் தெரியாத அளவுக்கு இந்த சாலையை மழைநீர் மூழ்கியுள்ளது. அதிக மழை பெய்ததே இதற்குக் காரணம் என்று அமைச்சர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.. அதேநேரம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்று சாடியுள்ளார்.

இந்த வீடியோவில் மழை நீர் எந்தளவுக்குத் தேங்கி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பெரிய பஸ் கூட கணிசமாக மூழ்கும் அளவுக்கு நீரின் அளவு சாலைகளில் அதிகமாக உள்ளது இதில் தெளிவாகத் தெரிகிறது.

வீட்டில் புகுந்த மழை நீர்: பெங்களூரில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்த தகவல்களைக் களத்தில் இருந்து நமது ஒன் இந்தியா செய்தியாளர்களும் வழங்கி வருகிறார்கள். அங்கு எலகங்கா பகுதியில் கொட்டிய கனமழையால் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் கூட மழை நீர் புகுந்து இருப்பதை இது காட்டுகிறது.

வடக்கு பெங்களூரில் உள்ள சுரங்கங்களின் நிலை இப்படி தான் உள்ளது. சுரங்கங்களில் இருந்து நீரை அகற்றும் பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும் கூட சில பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இன்னுமே பயணிக்க முடியாத நிலையே இருக்கிறது.

கனமழையின் காரணமாக, ஜிகேவிகே வளாகச் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எலகங்கா மண்டலக் குழு அதை அப்புறப்படுத்தினர். மேலும், சில இடங்களிலும் இதுபோல அதிக மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+