Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RCB அணி எங்களுக்கு தான்.. வாங்குவதாக அறிவித்தார் பிரபல தொழிலதிபர்.. யார் இந்த ஆதார் பூனவல்லா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனாக வலம் வரும் ஆர்சிபி அணியை அதன் உரிமையாளராக இருக்கும் ‛யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்' நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் ஆர்சிபி அணியை வாங்க உள்ளதாக நம் நாட்டின் பிரபல தொழிலதிபர் ஆதார் பூனவல்லா அறிவித்துள்ளார். அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

ஐபிஎல்லில் அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளில் ஒன்றாக ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணி உள்ளது. கடந்த 17 சீசன்களில் ஏமாற்றத்தை சந்தித்தது. சில சீசன்களில் பிளேஆப், இறுதி போட்டி வரை வந்தாலும் கூட ஆர்சிபி அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

ருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு ஆதரவு அளித்னர். ஒவ்வொரு முறையும் ஐபிஎல் சீசன் தொடங்கும்போது ‛இ சாலா கப் நம்தே' (இந்த முறை கோப்பை எங்களுக்கு) என்ற கோஷத்துக்கு ஆர்சிபி அணியை உற்சாகப்படுத்தினர்.

we-will-be-putting-in-strong-bid-for-rcb-says-adar-poonawalla

இறுதியாக ஆர்சிபி அணி கடந்த ஆண்டு நடந்த 18 வது சீசனில் பைனலில் வென்று முதல் முறையாக கோப்பையை கொண்டாடியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டம் அடங்குவதற்குள் தான் ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அதன் உரிமையை வைத்துள்ள நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் தான் ஆர்சிபி அணியை வாங்க ஏலம் கோர உள்ளதாக ஆதார் பூனவல்லா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆதார் பூனவல்லா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் தொடரில் சிறந்த அணிகளில் ஒன்றாக ஆர்சிபி அணியை வாங்க வலுவான மற்றும் போட்டித்தன்மை கொண்ட ஏலப்புள்ளியை நாங்கள் வழங்க உள்ளோம்'' என்றார்.

இந்த தொழிலதிபர் ஆதார் பூனவல்லா சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளராகவும், சிஇஓவாகவும் உள்ளார். இந்த நிறுவனம் தான் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரித்து வழங்கியது. இவர் ஆர்சிபி அணியை வாங்க தொடக்கம் முதலே ஆர்வம் காட்டி வந்தார். தற்போது ஆர்சிபி அணியை வாங்கும் முனைப்பில் ஏலம் கோர உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி தற்போது ‛யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்' நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ளது. இது Diageo நிறுவனத்தின் கீழ் வருகிறது. இந்த நிறுவனம் பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மதுபான நிறுவனமாகும். இந்நிலையில் தான் ஆர்சிபி அணியை விற்க அந்த நிறுவனம் முடிவு செய்தது.

ஆர்சிபி அணியின் மொத்த மதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் 2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்திய மதிப்பில் ரூ.17,859 கோடியாகும். இதனால் அந்த அணியை யார் வாங்குவார்கள்? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதுமட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த பல தொழிலதிபர்கள் ஆர்சிபி அணியை வாங்க காய்நகர்த்தி வருகின்றனர்.

அதன்படி ஆதார் பூனவல்லாவை தவிர பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம், கர்நாடகாவை சேர்ந்த மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவ குழுமத்தின் தலைவரான ரஞ்சய் பாய், கர்நாடகாவை சேர்ந்த ஜெரோதா (பங்கு சந்தை முதலீட்டு நிறுவனம்) மற்றும் ட்ரூ பீக்கன் நிறுவனங்களின் இணை நிறுவனரும், தொழிலதிபருமான நிகில் காமத் ஆகியோர் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் சேர்ந்த பர்த் ஜிண்டால் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் ஜிஎம்ஆர் குழுமம் 50 சதவீத பங்கை வைத்துள்ளது. ஆனால் பர்த் ஜிண்டால் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர்கள் தவிர டெல்லியை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரும், அமெரிக்காவை சேர்ந்த 2 பங்கு சந்தை சார்ந்த நிறுவனங்களும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் ஆர்சிபி அணியின் அடுத்த ஓணர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+