என்னப்பா இது.. நிம்மதியா கள்ளக் காதல் கூட பண்ண முடியல.. வெறுத்துப்போன இளம் ஜோடி தற்கொலை
பெங்களூர்: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 20 வயது நர்சிங் மாணவியும், கேரளாவை சேர்ந்த 29 வயது இளைஞரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களின் கள்ளக்காதல் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அபில் ஆபிரகாம் (வயது 29). இவர் பெங்களூரில் தங்கி நர்சிங் சர்வீஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவ்மினி தாஸ் (வயது 20). இவர் பெங்களூரில் தங்கி தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படிப்பை படித்து வந்தார்.

இவர்கள் 2 பேருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ தொடங்கினர்.
அதாவது பெங்களூர் கொத்தனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட தொட்டகுப்பியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் உள்ள பிளாட்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ தொடங்கினர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு இருவரும் வசித்து வரும் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டை திறக்க முயன்றனர். ஆனால் அவர்களால் திறக்க முடியாத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டு உள்ளே இருவரின் உடலிலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருவரின் உடலிலும் பிடித்த தீயை அவர்கள் அணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது சவ்மினி தாஸ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. மாறாக அபில் ஆபிரகாமுக்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். ஆனாலும் கூட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அறிந்தவுடன் கொத்தனூர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது பெங்களூரில் தங்கி நர்சிங் படித்து வந்த சவ்மினி தாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது. திருமணத்துக்கு பிறகு அவர் தனது கணவர் அனுமதியுடன் பெங்களூரில் தங்கி நர்சிங் படிப்பை தொடங்கி உள்ளார். இந்த வேளையில் அபில் ஆபிரகாமை சந்தித்துள்ளார்.
இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். சவ்மினி தாஸ் தனது கணவரை மறந்து கள்ளக்காதலன் அபில் ஆபிரகாம் உடன் சேர்ந்து‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே சமீபத்தில் சவ்மினி தாஸ் மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது கணவரிடம் அபில் ஆபிரகாம் பற்றி கூறினார். மேலும் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதற்கு அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் சவ்மினி தாஸ், தனது கணவரை பிரிந்து அபில் ஆபிரகாமுடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து அவர் மேற்கு வங்கத்தில் இருந்து மீண்டும் பெங்களூர் வந்த நிலையில் இருவரும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளது உயிரை விட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இருவரும் எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை. அதேவேளையில் சவ்மினி தாஸை பிரிய அவரது கணவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இந்த மனவருத்தத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications