மேற்கு தொடர்ச்சி ‛‛மலையே’’ பெங்களூர் லால்பாக் வந்துவிட்டது! அசத்தல்.. மக்களே மிஸ் பண்ணாதீங்க! செம
பெங்களூர்: பெங்களூர் லால்பாக் பூங்காவுக்கு செல்லும் மக்களுக்கு கர்நாடகா தோட்டக்கலைத்துறை குட்நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளது. அதோடு இந்த நடவடிக்கை நிச்ச்யம் மக்களை கவரும் வகையில் இருக்கும் என தோட்டக்கலைத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பெங்களூர் சாந்தி நகர் பஸ் நிலையத்தின் அருகே லால்பாக் பூங்கா அமைந்துள்ளது. கர்நாடகா அரசின் தோட்டக்கலைத்துறை இந்த பூங்காவை பராமரித்து வருகிறது. இந்த பூங்கா 6 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மலர் மற்றும் பழக்கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அப்போது கலைநயத்துடன் மலர் மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் மக்கள் பார்வைக்காக இடம்பெறும். இந்த கண்காட்சியை ஏராளமானவர்கள் கண்டு ரசிப்பார்கள்.

மேலும் லால்பாக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செடி, மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் பிற நாட்களிலும் ஏராளமான மக்கள் லால்பாக்கிற்கு சென்று அங்குள்ள செடி, மரங்கள், நீர்நிலைகளை ரசிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. உண்மையில் பெங்களூரில் உள்ள மக்களுக்கு இந்த பூங்கா சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் மேற்கு தொடர்ச்சி மலையை அப்படியே பெங்களூர் லால்பாக் பூங்காவிற்கு கர்நாடகா தோட்டக்கலைத்துறை கொண்டு வந்துள்ளது. அதாவது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அபூர்வ செடி வகைகளை லால்பாக் பூங்காவில் நடப்பட்டுள்ளது.
மொத்தம் 132 இனங்களை சேர்ந்த 150 செடிகள் லால்பாக் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குரங்கு பலா, பிஷப் மரம், நறுமணம் கொண்ட பத்ரி மரம், குசும் மரம், மலை சிடார், சிலோன் இரும்பு மரம், பென் தேக்கு, ஹெலிகாப்டர் பூக்கள் உள்ளிட்ட செடி, மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. லால்பாக்கின் கிழக்குபகுதியில் தரிசு நிலங்களாக உள்ள நிலையில் அதனை பசுமையாக மாற்றும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி லால்பாக்கின் துணை இயக்குனர் குசுமா கூறுகையில், ‛‛நாங்கள் தமிழ்நாட்டின் ஊட்டி மற்றும் புனேவில் இருந்து செடிகளை வாங்கி வருகிறோம். தற்போது 23 லட்சம் மலர் செடிகளை வளர்த்து கொண்டு வருகிறோம். இது தவிர 15 லட்சம் மலர் செடிகள் விதானசவுதாவின் மலர் தோட்டத்தின் ஒருபகுதியாக இருக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலையின் குந்தல்புரா மற்றுமு் பிஆர் குன்றுகளில் இருந்து 132 இன செடிகள் கொண்டுவந்து ஓராண்டில் நடவு செய்துள்ளோம். தற்போது 150 செடிகள் நடவு செய்துள்ளோம். பெங்களூர் நகருக்கே வனப்பகுதியை உருவாக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை தாவரங்களை பாதுகாக்க வேண்டும். லால்பாக் வரும் மக்களை கவரும் வேண்டும் என்ற நோக்கங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். '' என்றார்.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications