"பர்தா" எங்கே?.. இந்து பெண்ணை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவன்.. நடுங்கிபோன பெங்களூரு...!
மனைவியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்
பெங்களூர்: ஒரு கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளதையடுத்து, மத ரீதியான கண்டனங்கள், எதிர்ப்புகள் வெடித்து வருகின்றன.
கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக்.. 26 வயதாகிறது.. இவர் கல்லூரியில் படித்து வருகிறார்..
தினமும் காலேஜூக்கு ஆட்டோவில்தான் சென்று வருவார்.. அப்போது ஆட்டோ டிரைவர் முகமது அசாஸ் என்பவருடன்தான் பழக்கம் ஏற்பட்டு, இதுவே காதலாக இருவருக்கும் மாறி உள்ளது. முகமதுக்கு 30 வயதாகிறது.

இந்து குடும்பம்
தீவிரமான காதலையடுத்து, கடந்த 2018-ல் இருவருமே தங்கள் காதலை வீடுகளில் தெரிவித்துள்ளனர். அபூர்வா இந்து குடும்பத்தை சேர்ந்தவர்.. முகமது இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.. இந்து குடும்பத்தில் ஒரே மகளாக பிறந்த அபூர்வாவை, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்துக்கு முழு சம்மதம் தெரிவித்துள்ளனர்... மகளின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கவுமில்லை.. திருமணத்தன்று, அபூர்வாவின் பெயர் அர்ஃபா பானு என்று மாற்றப்பட்டது..

திருமணம்
முழு ஆசீர்வாதத்துடன் இரு வீட்டு பெற்றோர் முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்தது... ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கிய நிலையில், தம்பதியிடையே பிரச்சனைகள் வெடித்தன.. சமையல் விஷயத்தில்தான் தகராறு ஆரம்பமாகி உள்ளது.. அபூர்வா பிராமண குடும்பத்தை சேர்ந்தவராம்.. அப்படி இருந்தும், அசைவ உணவுகளை சமைக்க சொல்லி, கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.. பர்தா அணிய சொல்லி வற்புறுத்தப்பட்டுள்ளார்..

பிராமண பெண்
இஸ்லாமிய முறைகளை எல்லாவற்றிலும் கடைப்பிடிக்கும்படி அசாஸ் நிறைய கண்டிஷன்களை போட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் இதற்கு அபூர்வா மறுக்கவும், தகராறு அதிகமாகி உள்ளது.. அப்போதுதான் இன்னொரு விஷயம் அபூர்வாவுக்கு தெரியவந்துள்ளது.. அசாஸுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம். 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. இதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே அபூர்வா போய்விட்டார்... இதனால், அசாஸைப் பிரிந்து வாழ முடிவெடுத்தார்..

தகராறு
4 மாதங்களுக்கு முன்பு அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார். ஆனால், இந்த விவாகரத்துக்கு முகமது அசாஸ் ஒப்புக் கொள்ளவில்லை.. அபூர்வாவுடன் மறுபடியும் பிரச்சனை செய்துள்ளார்.. நேற்று முன்தினம் அபூர்வா தன்னுடைய அம்மா வீட்டிற்கு அருகிலேயே ஸ்கூட்டி ஓட்ட பழகி கொண்டிருந்தார்... அப்போது அங்கு வந்த அசாஸ், அபூர்வாவிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்...

கத்திக்குத்து
அதற்கு அபூர்வா மறுக்கவும், மறைத்து வைத்திருந்த கத்தியால் அபூர்வாவின் தலை, தோள் பட்டை, மார்பு, என பல இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார்.. மொத்தம் 23 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறார்.. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அபூர்வாவை அருகில் இருந்தோர் மீட்டு ஜிம்ஸ் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்தனர்.. இப்போது அபூர்வா சீரியஸாக இருப்பதாக சொல்லப்படுகிறது..

கைது
இது தொடர்பான வழக்கு பதியப்பட்டு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.. ஆனால் அதற்குள் அசாஸ் தலைமறைவானார்.. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, இறுதியில் நேற்றைய தினம் அசாஸை போலீசார் கைது செய்தனர்... இந்த சம்பவத்துக்கு பல்வேறு கண்டனங்கள், எதிர்ப்புகள் வெடித்து கிளம்பி உள்ளன.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications