முதலில் விஜயலட்சுமி.. அடுத்து அவரது அம்மா.. மக்கள் போராட்டத்தால் கர்நாடகாவில் சிக்கிய உல்லாச காதலன்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரும், அதே பகுதியில் வசிக்கும் ஹரிகிருஷ்ணா என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி விஜயலட்சுமியுடன் ஹரிகிருஷ்ணா உல்லாசமும் அனுபவித்து வந்தாராம். இந்நிலையில் காதலன் ஹரிகிருஷ்ணா திருமணம் செய்ய மறுத்ததுடன். வேறு பெண்களுடன் சுற்றினாராம்..இதனால் விஜயலட்சுமியும், அவரது தாயும் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஹெப்பகாவடி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டே கவுடா, மற்றும் லட்சுமி தம்பதியின் மகள் விஜயலட்சுமி. இவருக்கு 21 வயது ஆகிறது. விஜயலட்சுமி மாண்டியா மாவட்டம் மாரசிங்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹரிகிருஷ்ணா திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி விஜயலட்சுமியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்தாராம்.

ஒருக்கட்டத்தில் விஜயலட்சுமியுடன் பழகுவதை ஹரிகிருஷ்ணா தவிர்த்துவிட்டாராம். வேறு சில பெண்களுடன் ஹரிகிருஷ்ணா சுற்ற தொடங்கினாராம். இதுகுறித்து ஹரிகிருஷ்ணாவிடம் விஜயலட்சுமி கேட்டதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினாராம். ஆனால் ஹரிகிருஷ்ணா திருமணத்துக்கு மறுத்துவிட்டதாக சொல்லப்படுகறது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ரெயில் முன்பு பாய்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இதனால் நஞ்சுண்டே கவுடாவும், அவரது மனைவி லட்சுமியும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், மகள் இந்த முடிவை எடுக்க காரணமாக இருந்த ஹரிகிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நஞ்சுண்டே கவுடா மாண்டியா புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அத்துடன் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மகள் இறந்ததாலும், அவரது சாவுக்கு நீதி கிடைக்காததாலும் 2 பேரும் துக்கத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமி திடீரென்று தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டியா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது உறவினர்கள் ஆவேசத்துடன் இருந்தனர். அங்கு போலீசார் லட்சுமியின் உடலை அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயன்றுள்ளார்.
இதை கண்டு கொதித்து போன லட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தார்கள். அவர்கள் லட்சுமியின் உடலை எடுக்க விடாமல் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். காதலன் ஏமாற்றியதால் விஜயலட்சுமி இந்த முடிவை எடுத்ததாகவும். அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவரது தாயும் இப்போதும் இல்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மாண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இளம்பெண் விஜயலட்சுமி வழக்கில் மாண்டியா புறநகர் போலீசார் அவரது காதலன் ஹரிகிருஷ்ணா, அவரது குடும்பத்தினர் என 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் ஹரிகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மாண்டியா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications