பாஜக எடுத்த "இன்டர்னல் சர்வே".. அமித் ஷாவால் கூட எதுவும் பண்ண முடியாதாமே! கர்நாடகாவில் பதறும் தாமரை?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பாஜக உட்கட்சி சர்வே ஒன்றை எடுத்துள்ளதாகவும், அதில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள், பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி அங்கே தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதால் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

What does BJP internal survey about the Karnataka election say? Journalist Mani reveals

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அங்கே வேட்பாளர்களை அறிவித்து உள்ள காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், கர்நாடகா சட்டசபை தேர்தலில் கவனமாக ராகுல் காந்தி பேச வேண்டும். ராகுல் காந்தி பேசுவதுதான் காங்கிரசுக்கு சிக்கலாகிறது. காங்கிரசுக்கு அவரே சிக்கலாகிவிட கூடாது.

அவர் ஒழுங்காக பேச வேண்டும். ஏடாகூடமாக பேசி மாட்டிக்கொள்ள கூடாது. அங்கே ஒரு இன்டர்னல் சர்வே பாஜக சார்பாக எடுக்கப்பட்டு உள்ளது.

அது லாஜிக்களாக சரியாக இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக அங்கே தோல்வி அடையும். சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடையும். ஆனால் லோக்சபா தேர்தலில் அதே நிலை இருக்காது.

அங்கே பாஜக மீது விமர்சனம் உள்ளது. ஆனால் மோடி மீது விமர்சனம் இல்லை. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் இதே நிலை வரும் என்று நினைக்காதீர்கள்.

மோடியின் செல்வாக்கு பெரிய அளவில் சிதையவில்லை. எதிர்க்கட்சிகள் கொண்டாடும் அளவிற்கு மோடியின் கவுரவம் குறையவில்லை. ஆனால் பொம்மை ஆட்சியின் செல்வாக்கு குறைந்து உள்ளது.

அங்கே சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அப்படி இருக்காது.

அதேபோல் ஜேடிஎஸ் அங்கே கிங் மேக்கராக இருக்காது. அங்கே யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வர கூடாது என்பதே முக்கியம். அதனால் பாஜக ஆட்சிக்கு வர வேண்டாம் என்றால் அவர்கள் கண்டிப்பாக காங்கிரசுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

ஜேடிஎஸ்ஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் ஜேடிஎஸ் இதனால் கிங் மேக்கராக ஆகும் வாய்ப்பு குறைவு. சட்டசபை தேர்தலில் இதனால் காங்கிரசுக்கு வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.

பாஜகவின் இண்டர்னர் சர்வேவை நான் நம்புகிறேன். அங்கே பாஜக மீது விமர்சனம் உள்ளது. ஆனால் மோடி மீது விமர்சனம் இல்லை. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் இதே நிலை வரும் என்று நினைக்காதீர்கள்.

அதனால்தான் இப்போது மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் மாற்ற முடியவில்லை என்றால் பாஜக கைவிட்டுவிடும். அவர்கள் பெரும்பாலும் சட்டசபை தேர்தல் போய்விட்டது என்றால் நாடாளுமன்ற தேர்தல் மீது கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள்.

அமித் ஷாவால் இதை மாற்ற முடியாது. அவர் சர்வ ரோக நிவாரணி கிடையாது. அவர் தோல்வி அடையாத தேர்தலே கிடையாது. மேற்கு வங்கத்தில் மிக மோசமாக தோல்வி அடைந்தனர். அதனால் கர்நாடகாவில் ஒரு லெவலுக்கு மேல் போனால் எதுவும் பண்ண முடியாது.

அமித் ஷா அனைத்தையும் மாற்ற கூடிய சர்வ ரோக நிவாரணி கிடையாது. பல பெரிய தலைவர்கள் வந்திருக்கிறார்கள், போய் இருக்கிறார்கள். அதனால் அமித் ஷாவால் பெரிய மாற்றங்களை செய்ய முடியாது.

அங்கே மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்தது பெரிதாக எடுபடவில்லை. எடியூரப்பாவே அங்கே இதை எதிர்த்து வருகிறார். இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், அந்த பார்முலாவை கர்நாடகாவில் குறைத்துக்கொள்வார்கள்.

What does BJP internal survey about the Karnataka election say? Journalist Mani reveals

கர்நாடகாவில் வெற்றிபெற்றால் உளவியல் ரீதியான உந்து சக்தியை காங்கிரஸ் பெறும். பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை பெறும். அந்த நம்பிக்கை காங்கிரசுக்கு மிக முக்கியம் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+