Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி? வந்து விழுந்த கேள்வி.. ஒரே வரியில் பதிலளித்த பரமேஸ்வரா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தனக்குத் துணை முதல்வர் பதவி கிடைக்காததால் ஜி.பரமேஸ்வரா அதிருப்தியாளராக மாறக்கூடும் என்றும் கூறப்பட்டது. இதனிடையே இது குறித்து அவரே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எக்ஸிட் போல்களில் தொங்கு சட்டசபை அமையலாம் என்று கூறப்பட்டது.

 What G Parameshwara said about not being given the CM or Deputy CM post

வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே பல இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அங்கே மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற சூழல் இருந்தது.

காங்கிரஸ்: இதில் காங்கிரஸ் கட்சி சுமார் 42% வாக்குகளைப் பெற்று 135 இடங்களில் மிகச் சிறப்பான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால், கர்நாடகாவைத் தக்கவைக்க பாஜக மிகப் பெரியளவில் முயன்றது. பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாகப் பல முறை வந்து பிரசாரம் செய்தார். இருப்பினும், அதையெல்லாம் தாண்டி காங்கிரஸ் மிகப் பெரியளவில் வென்றது.

இதையடுத்து யார் முதல்வர் என்ற பேச்சு வந்த போது, இந்த விவகாரத்தில் 4 நாட்கள் இழுபறி நடைபெற்றது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, சித்தராமையா ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆளுநரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

பதவியேற்பு: நாளை மே 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில், இதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் எனப் பல முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அனைத்தும் நன்றாகச் செல்வது போலத் தெரிந்தாலும் கூட அதிருப்திகளும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏனென்றால் முதலில் அங்கே 3 துணை முதல்வர் பதவிகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு டிகே சிவகுமாருக்கு மட்டுமே துணை முதல்வர் பதவி என்று முடிவானது. இதனால் தனக்குத் துணை முதல்வர் பதவியைக் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் அரசு இருந்த போது துணை முதல்வராக இருந்தவர் தான் இந்த ஜி.பரமேஸ்வரா.

ஜி.பரமேஸ்வரா: இது குறித்து நேற்றைய தினம் 71 வயதாகும் ஜி.பரமேஸ்வரா ஓப்பானாக சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது, தலித்துகளின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் போனால் இயற்கையாகவே எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகளுக்கு வருந்தி பயனில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும், பிரச்சினையைச் சரி செய்யவில்லை என்றால் கட்சிக்குப் பிரச்சனைதான் வரும் எனக் கூறியிருந்தார். இது கர்நாடக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கஷ்டப்பட்டு காங்கிரஸ் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த ஒரே வாரத்திற்கு இப்படியொரு பிரச்சினையா என்றே பலரும் கருதினர். இன்னும் சிலர் ஜி.பரமேஸ்வரா அதிருப்தியாளராக மாறக்கூடும் என்றும் தெரிவித்தனர். இதனிடையே இது குறித்து அவரே முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

என்ன சொன்னார்: இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜி பரமேஸ்வரா, "அது பரவாயில்லை. ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் தியாகம் செய்ய வேண்டும். எல்லாம் நல்லதுதான் நடக்கிறது" என்று அவர் பதிலளித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க நாளை பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாட்டுப் பணிகளை டிகே சிவக்குமார் நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+