பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க
பெங்களூர் : பெங்களூரில் சோழதேவனஹள்ளியில் உள்ள அப்பிகெரே பகுதியைச் சேர்ந்த புனிக்குமார் என்பவர் ஐடி ஊழியர். இவரது மனைவி சுஷ்மா. இவரும் கணினி பொறியாளர்.. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்தார். இவர் புனிக்குமாரை கல்யாணம் செய்த பின்னர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். வசதி வாய்ப்பு எல்லாம் இருந்தும், சுஷ்மா விசித்திரமான சிக்கலை எதிர்கொண்டார்.. சமையலறைக்குள் மாமியார் அனுமதிக்கவில்லை.. இதனால் சுஷ்மா எடுத்த முடிவு பெங்களூரை ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைக்கு பலர் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், சுதந்திரம், தனியுரிமை முக்கியம் என்பதில் உறுதியாக உள்ளார்கள். பல குடும்பங்களில் தனியுரிமை இல்லாதது, சுதந்திரம் பாதிக்கப்படுவது தான் பிரச்சனையாக இருக்கிறது. அதாவது மனைவி அல்லது கணவன் இருவரில் யாராவது ஒருவர் அவர்களை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். அவர்களின் விருப்பங்கள், உரிமைகளை கண்டு கொள்வது இல்லை. தாங்கள் சொல்வதே நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்..

இது தம்பதியருக்கு இடையில் விரிசலை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு ஏற்படும் மனக்கசப்பு ஒரு புறம் எனில்,மாமியாரும் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புவதும் சிக்கலை அதிகமாக்குகிறது. மாமியார் சொல்படி நடக்காத மருமகள் கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் நடக்கிறது.சரியான புரிதல் வர வேண்டி சமயங்களில், புரிதல் வராமல் பிரிவே வருகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை கையாள முடியாமல் பெண் அல்லது ஆண் தவறான முடிவெடுக்கிறார்கள். அப்படித்தான் பெங்களூருரில் நடந்துள்ளது
பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அப்பிகெரே பகுதியில் வசிப்பவர் புனிக்குமார். இவரது மனைவி சுஷ்மாவுக்கு 35 வயது ஆகிறது. கம்ப்யூட்டர் என்ஜினியரான சுஷ்மா, திருமணத்துக்கு முன்பு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஐடி நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு புனிக்குமாரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவர் வேலையை விட்டுவிட்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சுஷ்மாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு புனிக்குமார், அவரது தாய் கல்பனா ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்தார்களாம். இந்த விவகாரத்தில் அடிக்கடி மாமியார், மருமகள் இடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளதாம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சுஷ்மா சமையல் செய்ய தயாராகியுள்ளார். ஆனால் மாமியார் கல்பனா சுஷ்மாவை சமையல் செய்ய வேண்டாம் என கூறி தகராறு செய்துள்ளார். அதற்கு சுஷ்மா நான் தான் சமையல் செய்வேன் என கூறினாராம்
இருப்பினும் கல்பனா, சுஷ்மாவை சமையல் செய்யவிடவில்லை. ஒருபுறம் வரதட்சணை கொடுமை மறுபுறம் மாமியார் தொல்லை காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுஷ்மா தனது படுக்கை அறையில் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சுஷ்மா உடலை அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், சுஷ்மாவின் பெற்றோர் தங்களது மகளை கணவர் புனிக்குமாரும், அவரது தாய் கல்பனாவும் வரதட்சணை கொடுமை செய்து வந்ததாகவும், இதனால் சுஷ்மா தவறான முடிவெடுத்து வாழ்க்கைய முடித்துக் கொண்டதாகவும் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்த போலீசார் புனிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரது தாய் கல்பனா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications