பெங்களூரில் காதலிக்க மறுத்த திருவண்ணாமலை மாணவி .. மிளகாய் பொடியுடன் ஒரு தலைக்காதலன் ஷாக் சம்பவம்
பெங்களூர்: தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை சொந்த ஊராக கொண்ட கோபால் தனது குடும்பத்துடன் கர்நாடகாவில் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருடைய மகள் யாமினி பிரியா அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம் படித்து வருகிறார். நேற்று காலையில் யாமினி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். கல்லூரியில் நடந்த தேர்வை எழுதி விட்டு மதியம் அவர் வீட்டுக்கு கிளம்பி உள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு தலைக்காதலன் யாமினி இன்று உயிருடன் இல்லை..
ஒரு தலைக்காதல் என்பது இளம் பெண்களை மோசமாக பாதிக்கிறது. அவர்களாக ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறுவார்கள். பின்னாடியே சுற்றுவார்கள்.. ஒருநாள் அவர்களின் காதலை அந்த பெண் ஏற்க வேண்டுமாம்... உண்மை காதல், அந்த காதல், இந்த காதல் என்று சினிமா வசங்களை பேசி சுற்றும் இளைஞர்கள், ஒரு நாள் அந்த பெண்ணுக்கு எமனாகி விடுகிறார்கள். தன்னை காதலிக்க மறுக்கும் பெண்ணின் உயிரையே எடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் பெங்களூரில் தமிழ் பெண்ணுக்கு நடந்துள்ளது.

பெங்களூரு, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு போய்விட்டார். அங்குள்ள ஸ்ரீராமபுரம் அருகே சுதந்திர பாளையாவில் கோபால் வசித்து வருகிறார். இவரது மகள் யாமினி பிரியாவுக்கு 20 வயது ஆகிறது. யாமினி பிரியா, பனசங்கரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். நேற்று காலையில் யாமினி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். கல்லூரியில் நடந்த தேர்வை எழுதிவிட்டு மதியம் அவர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
மதியம் 2 மணியளவில் மல்லேசுவரத்தில் உள்ள மந்திரி வணிகவளாகம் பின்னால் வந்துள்ளாராம். அங்குள்ள ரயில்வே மேம்பாலம் அருகே யாமினி நடந்து வந்து கொண்டிருந்த போது, ஒரு இளைஞர், யாமினியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த மிளகாய் பொடியை யாமினியின் கண்ணில் வீசினாராம். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் யாமினி துடிதுடித்தார்
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யாமினியின் கழுத்தில் சரமாரியாக அந்த இளைஞர் குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த யாமினி அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்து அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். பட்டப்பகலில் பல பேர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அதேபோல்
இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து மாணவி யாமினியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், யாமினியை, சுதந்திர பாளையாவை சேர்ந்த விக்னேஷ் தான் கொலை செய்தது தெரியவந்தது. யாமினியை, விக்னேஷ் காதலித்துள்ளார். ஆனால் விக்னேசின் காதலை ஏற்க யாமினி மறுத்து விட்டார். ஆனாலும் அவரை பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி விக்னேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறாராம்.
இதற்கு முன்பு ஒரு முறை யாமினியின் கழுத்தில் விக்னேஷ் வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயற்சித்தாராம். ஆனால் யாமினி ஏற்கவில்லை. தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்து வந்த விக்னேஷ், கல்லூரி முடிந்து யாமினி வீட்டுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருந்து, திட்டமிட்டு கொன்றது தெரியவந்துள்ளது. தலைமறைவான விக்னேஷை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications