"ஐய்யோ.." இன்ஸ்டாகிராம் பிரபலத்தை பார்த்தவுடன் பிரதமர் மோடி சொன்னது இதுதான்.. ஏன் தெரியுமா
கர்நாடகா சென்ற பிரதமர் மோடி முக்கிய பிரபலங்களைச் சந்தித்தார்.
பெங்களூர்: கர்நாடகாவுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, நேற்று மாலை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களைச் சந்தித்தார். அது தொடர்பான படம் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால்.. அங்கு மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயல்கிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், பல தேசிய பாஜக தலைவர்கள் கர்நாடகாவுக்கு வருகின்றனர். தேர்தல் களமும் அங்குச் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு சென்றிருந்தார்.

பிரதமர் மோடி
அங்கு அவர் பெங்களூர் ஏரோ இந்தியா 2023 கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.. பெங்களூர் வந்திருந்த பிரதமர் மோடி, மாலையில் கன்னட நடிகர்கள் யாஷ், ரிஷப் ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களைச் சந்தித்தார்.. ராஜ்பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டின்னர் நிகழ்வில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இது தொடர்பான படங்களையும் கர்நாடக பாஜக தலைவர் பகிர்ந்துள்ளார்.

'ஐய்யோ ஷ்ரத்தா'
ராஜ்பவனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள ஷ்ரத்தா ஜெயின் என்பவரும் பிரதமர் மோடியைச் சந்தித்தார். டெக் உலகில் நடக்கும் வேலையிழப்பு குறித்து இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆனது நினைவுகூரத்தக்கது. தனது வாழ்க்கையின் பெருமைமிக்க தருணங்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி சொன்ன வார்த்தை
'ஐய்யோ ஷ்ரத்தா' என்று இணையத்தில் பிரபலமாக உள்ள ஷ்ரத்தா, தன்னை பார்த்தவுடன் பிரதமர் மோடி முதலில் ஐய்யோ என்றே கூறி வரவேற்றதாகவும் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் வசித்து வரும் ஐய்யோ ஷ்ரத்தா, இன்ஸ்டாகிராமில் 6.88 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார். பல்வேறு துறைகளில் நடக்கும் பிரச்சினைகள் குறித்தும் அவர் நகைச்சுவையாக வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

நன்றி
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது குறித்துப் பதிவிட்டுள்ள ஐய்யோ ஷ்ரத்தா, "நான் நமது நாட்டின் பிரதமரைச் சந்தித்துவிட்டேன்.. அவர் என்னைப் பார்த்தவுடன் முதலில் சொன்ன வார்த்தை 'ஐய்யோ!'.. ஆமாம் அவர் தான் சொன்னார்.. அது கனவு இல்லை.. அங்கு நடப்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. நான் கண்களைச் சிமிட்டவில்லை,.. பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியுடன் இருக்கும் படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஃபோட்டோ
மேலும், மற்றொரு படத்தில் பிரதமர் மோடி, கன்னட நடிகர்கள் யாஷ், ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோருடன் எடுத்த குழு படத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது இந்த படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 1.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்த படத்தை லைக் செய்துள்ளனர். மேலும், நெட்டிசன்கள் பலரும் பிரதமர் மோடியைச் சந்தித்ததற்கு ஐய்யோ ஷ்ரத்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

'ஐய்யோ"
பிரதமர் உடனான சந்திப்பு தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஐய்யோ ஷ்ரத்தா கூறுகையில், "நான் அறைக்குள் நுழைந்தவுடன் கை கொடுத்தார்.. அவர் என்னைப் பார்த்தவுடன் "ஐய்யோ" என்று குறிப்பிட்டார். தென்னிந்தியத் திரையுலகம் நம் நாட்டின் அழகைக் காட்டிய விதத்தைப் பற்றி அவர் எவ்வளவு பெருமைப்படுகிறார் என்று எங்களிடம் கூறினார்" என்று அவர் தெரிவித்தார். இந்தப் படம் இப்போது












Click it and Unblock the Notifications