"நந்தனி தான் பெஸ்ட்.." கர்நாடகாவில் வாவ் சொன்ன ராகுல் காந்தி.. சூடுபிடிக்கும் அமுல் vs நந்தனி மோதல்
பெங்களூர்: கர்நாடகாவில் அமுல் மற்றும் நந்தினி பிராண்டிற்கு இடையேயான மோதல் தொடர்ந்து உச்சமடைந்து வரும் நிலையில், இது குறித்து ராகுல் காந்தி முதல்முறையாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே இப்போது பசரவாஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் இருக்கிறது.

அங்கே இப்போது பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னனும் சில வாரங்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அமுல் vs நந்தினி: ஏற்கனவே வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் அங்கே அமுல் vs நந்தினி மோதல் இப்போது ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நடத்தும் அமுல் நிறுவனம் பெங்களூருவில் ஆன்லைன் டெலிவரிகளை தொடங்குவதாக அறிவித்தது. இருப்பினும், இது இணையத்தில் மிகப் பெரிய மோதலுக்கு வழிவகுத்தது. அமுல் வருகைக்குக் கர்நாடகாவில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏனென்றால், கர்நாடக பால் உற்பத்தியாளர்களுக்கு அங்கே ஏற்கனவே நந்தினி என்ற நிறுவனம் இருக்கிறது. இந்தச் சூழலில் அங்கே அமுல் வந்தால் அது நந்தினி நிறுவனத்தைப் பாதிக்கும் என்பதாலேயே பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் இந்த விஷயத்தை இப்போது கையில் எடுத்து பாஜகவைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். கர்நாடக நிறுவனத்தை அழிக்கும் தீய முயற்சி இது என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.
ராகுல் காந்தி: ஏற்கனவே, குஜராத் பால் சங்கத்துடன் கர்நாடக பால் சங்கத்தை இணைக்க முயற்சி நடந்ததாகவும் அது தோல்வியடைந்த நிலையில், இதுபோல நுழைய முயல்வதாகவும் பலரும் சாடினர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி இப்போது இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அங்கே தேர்தல் பிரசாரத்திற்குச் சமீபத்தில் தான் ராகுல் காந்தி சென்றார். அங்கே கோலார் மற்றும் பெங்களூரில் அவர் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இதனிடையே கர்நாடக வந்த ராகுல் காந்தியை அக்கட்சி நிர்வாகிகள் பெங்களூருவில் உள்ள நந்தினி பால் பார்லருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ராகுல் காந்தி நந்தினி தயாரிப்புகளான ஐஸ்கிரீம், கூல் டிரிங்ஸை குடித்து மகிழ்ந்தார்.

நந்தினி தான் பெஸ்ட்: அத்துடன் நிற்காமல் ராகுல் காந்தி, "கர்நாடகத்தின் பெருமை தான் நந்தினி.. மாநிலத்தில் நந்தினி தான் எப்போதும் பெஸ்ட்" என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி பாஜகவைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ராகுல் காந்தியே இப்படி ட்வீட் செய்தது அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இதனிடையே இந்த விவகாரத்தில் பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரும் எம்பியுமான தேஜஸ்வி சூர்யா காங்கிரஸை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியால் கேரளாவில் நந்தினி தயாரிப்புகளை விற்க அனுமதிக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக பதிலடி: அவர் மேலும், "ராகுல் காந்தி சொன்னதை போல நந்தினிதான் சிறந்தது.. ராகுல் இப்படிச் சொன்னது மகிழ்ச்சி தான். ஆனால், கேரளாவிலும் நந்தினியின் விற்பனை சுமுகமாக நடக்க ராகுல் காந்தி தலையிட வேண்டும்.. இல்லை என்றால் இதை மற்றொரு தேர்தல் ஸ்டன்டாகவே பார்க்க வேண்டி உள்ளது. கேரளாவில் நந்தினிக்கு இருக்கும் பிரச்சினையை அவர் தீர்த்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்கவே விரும்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
கேரளா பால் சங்கத்தினர் தனியாக மில்மா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் தான் கேரளாவில் நந்தினி பாலை விற்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். கேரளாவில் நந்தினியின் பால் பொருட்கள் விற்கப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், பாலை நேரடியாக விற்பது மில்மா விற்பனையை பாதிக்கும் என்பதே அவர்கள் கருத்தாகும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications