இன்னும் 2 நாட்களில் பாருங்கள்.. பாஜகவிற்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் கர்நாடக சபாநாயகர்.. அதிரடி!
பாஜகவின் திட்டங்களை தவிடு பொடியாக்கும் வகையில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறார்.
Recommended Video
பெங்களூர்: பாஜகவின் திட்டங்களை தவிடு பொடியாக்கும் வகையில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி சார்பாக குமாரசாமி நடத்தி வந்த ஆட்சி பெரும்பான்மை இல்லாமல் கலைந்தது. 16 கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கலைந்தது.
ஆனால் இந்த 16 பேரின் ராஜினாமா கடிதத்தை இன்னும் சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இவர்களின் ராஜினாமா கடிதம் மீது அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

நீக்கம் செய்தார்
இந்த நிலையில் இந்த 16 பேரில் மூன்று பேரை நேற்று ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோரை ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். கட்சி தாவல் தடை சட்டத்தை இவர்கள் மீறிவிட்டதாக கூறி இவர்களை தகுதி நீக்கம் செய்தார்.

மேலும் என்ன
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களால் அடுத்த சட்டசபை பொதுத்தேர்தல் வரை போட்டியிட முடியாது. இடையில் நடக்கும் இடைத்தேர்தல் எதிலும் போட்டியிட முடியாது. இது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு நாட்களில் மேலும் 13 எம்எல்ஏக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பேன் என்றும் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக ஏன்
இதனால் பாஜக தற்போது ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால் இடைத்தேர்தலில் 16 அதிருப்தி எம்எல்ஏக்களையும் வெல்ல வைத்து அமைச்சர் ஆக்குகிறேன் என்று கூறித்தான் அமித் ஷா காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து இருப்பார். இப்போது அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் இடைத்தேர்தலில் நிற்க முடியாது. இதனால் அவர்கள் ராஜினாமா செய்தது எல்லாம் மொத்தமாக வீணாகிவிடும்.

ஏன் தேர்தல்
மொத்தமாக சட்டசபையை கலைத்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே பாஜக இந்த 16 பேரையும் தேர்தலில் நிற்க வைக்க முடியும். அதேபோல் இந்த 16 பேரில் 11 உறுப்பினர்கள் அவர்கள் தொகுதியில் மிக முக்கியமான நபர்கள். இதனால் பாஜக அவர்களுக்கு எப்படியாவது வாய்ப்பு கொடுத்த ஆக வேண்டும். ஆகவே, இந்த 16 பேருக்கு பதில் வேறு யாரையும் பாஜக தேர்தலில் நிற்கவைய்க்க வாய்ப்பில்லை.

தேர்தல் முடியாது
ஆனால் தகுதி நீக்கம் காரணமாக இவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக தள்ளப்பட்டு உள்ளது. ஆகவே எடியூரப்பா உடனே ஆட்சி அமைக்க முடியாது. பொதுத்தேர்தலில் எப்படியாவது அதிக இடங்களை வெல்லலாம் என்று காங்கிரஸ் - மஜத கூட்டணி நம்புகிறது. இதற்கு உதவும்படிதான் தற்போது சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications