கர்நாடகா எங்க இருக்கு? எகத்தாளமாக கேட்ட ராஷ்மிகா மந்தனா! கடும் வெறியில் கன்னட சினிமா
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெறும் 16-வது சர்வதேச திரைப்பட விழாவை முன்வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன. இதில், பெங்களூர் திரைப்பட விழாவுக்கு கடந்த ஆண்டு வராத நடிகை ராஷ்மிகா மந்தனா, கர்நாடகா எங்கே இருக்கிறது என கேள்வி கேட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
பெங்களூரில் நடைபெறும் 16-வது சர்வதேச திரைபப்ட விழாவில் பங்கேற்று பேசிய கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், கன்னட திரை உலக நட்சத்திரங்களை சரமாரியாக தாக்கி பேசினார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக நடத்தப்பட்ட யாத்திரையில் பங்கேற்க கன்னட திரை நட்சத்திரங்கள் மறுத்துவிட்டனர்; உங்களது பிரச்சனைக்காக என்னிடம் தானே நீங்கள் வரவேண்டும்.. அப்போது நான் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு பாஜக, ஜேடிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், கர்நாடகாவின் உரிமைக்கான போராட்டத்தில் பங்கேற்கவில்லையே என்கிற வலியில் டிகே சிவகுமார் பேசியது சரியே என காங்கிரஸ் ஆதரிக்கிறது.

இதனைத் தொடர்ந்து புதிய சர்ச்சையாக, புஷ்பா-2 படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா சிக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவுக்கு ராஷ்மிகா மந்தனாவை அழைத்த போது, நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன்.. ஆமா.. கர்நாடகா எங்கே இருக்கிறது? என நக்கலாக கேட்டார் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கனிகா கூறுகையில், 2024-ம் ஆன்டு பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அப்போது ராஷ்மிகா மந்தனா அழைக்கப்பட்டார்; ஆனால் ஹைதராபாத்தில் இருக்கிறேன்.. கர்நாடகா எங்கே இருக்கிறது என கேட்டவர் ராஷ்மிகா. இத்தனைக்கும் கன்னட சினிமாவில்தான் அவர் அறிமுகமானார். இதனால் ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்; மேலும் கன்னட சினிமாக்களுக்கு மாநில அரசு மானியம் தருவதை நிறுத்தியாக வேண்டும். இது தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு கடிதமும் அனுப்ப போகிறேன். கன்னட சினிமா வர்த்தகசபையின் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications