RCB or CSK.. பெங்களூரில் கேள்வியால் மடக்கிய நிருபர்.. தோனியை இழுத்து அண்ணாமலை கூறிய சுவாரசிய பதில்!
பெங்களூர்: பெங்களூரில் பிரசாரம் செய்ய சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், ‛‛ஆர்சிபி அல்லது சிஎஸ்கே.. இரண்டில் எந்த அணி பிடிக்கும்? என்ற கேள்வி கேட்டு பத்திரிகையாளர் மடக்கி நினைத்தார். இதற்கு அண்ணாமலை சிஎஸ்கே முன்னாள் கேப்டன் டோனியின் பெயரை சொல்லி அளித்த பதில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்துவிட்டது. கர்நாடகாவில் இன்னும் லோக்சபா தேர்தல் முடியவில்லை. அங்கு மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கர்நாடகாவில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் 26ம் தேதி மற்றும் மே மாதம் 7 ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலில் பெங்களூரில் உள்ள 3 லோக்சபா தொகுதிகள் உள்பட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே மாதம் 7 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிற மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் கொல்லம் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதன்பிறகு அண்ணாமலை கர்நாடகா சென்றார். கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். குறிப்பாக பெங்களூரில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். அந்த பணியில் இருந்தபோது தான் அவர் ஐபிஎஸ் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தான் அண்ணாமலை பெங்களூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். பெங்களூர் தெற்கு தொகுதியின் சிட்டிங் எம்பியாக பாஜகவினர் தேஜஸ்வி சூர்யா உள்ளார். தேஜஸ்வி சூர்யா பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய தலைவராக இருக்கும் நிலையில் மீண்டும் அவர் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் தேஜஸ்வி சூர்யாவை ஆதரித்து அண்ணாமலை பெங்களூர் தெற்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பிரசாரத்துக்கு இடையே அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்த சமயத்தில் பத்திரிகையாளர் ஒருவர், தேஜஸ்வி சூர்யா, அண்ணாமலை ஆகியோரிடம் கூட்டாக பேட்டி எடுத்தார். அப்போது பத்திரிகையாளர் சிரித்தபடி, ‛‛நீங்கள் 2 பேரும் சர்ச்சைக்குரியவர்களாக இருக்கலாம்'' எனக்கூறியபடி தேஜஸ்வி சூர்யாவிடம், ‛‛ஆர்சிபி அல்லது சிஎஸ்கே'' என கேள்வி கேட்டார். அதற்கு தேஜஸ்வி சூர்யா சிரித்தபடி, ‛‛100 சதவீதம் ஆர்சிபி பிரதர்'' எனக்கூறினார்.
இதையடுத்து பத்திரிகையாளர் அண்ணாமலையிடம், ‛‛நீங்கள் பெங்களூரில் DCP ஆக பணியாற்றி உள்ளீர்கள். உங்களுக்கு ஆர்சிபியா, சிஎஸ்கேவா'' எனக்கூறி அதேகேள்வியை முன்வைத்தார். அதற்கு அண்ணாமலை சிரித்தபடி,‛‛இது தோனிக்கு கடைசி Tournament. இதனால் சிஎஸ்கேவை வெற்றிபெற அனுமதிக்க வேண்டும்'' என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதில் சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) தமிழ்நாட்டை குறிக்கும் வகையில் விளையாடி வருகிறது. ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணி கர்நாடகாவை குறிக்கும் வகையில் விளையாடி வருகிறது. அண்ணாமலையை தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். இந்நிலையில் தான் பத்திரிகையாளர் இந்த கேள்வியை அண்ணாமலையிடம் முன்வைத்த நிலையில் அவர் டோனியின் கடைசி டோர்னமென்ட். இதனால் சிஎஸ்கேவை வெற்றிபெற வைக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வைபவ் சூர்யவன்ஷியை இப்படி விமர்சிக்கலாமா.. தரக்குறைவாக பேசிய ஆர்சிபி வீரர்! இதெல்லாம் ஒரு பிரச்சனையா -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது எப்படி? கார்த்திக் சர்மா, உர்வில் படேலுக்கு பாடம் எடுத்த தோனி! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications