Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக பாஜக எம்எல்ஏ மகனிடம் ரூ.7.70 கோடி பறிமுதல்.. 2018இல் சொத்து மதிப்பு தெரிஞ்சா! ஷாக் ஆவீங்க

கர்நாடக அரசியலில் விருபாக்ஷப்பா இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் அரசு நிறுவனத்தின் டெண்டருக்கு லஞ்சம் வாங்க முயன்ற போது பாஜக எம்எல்ஏ விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மதல் கைது செய்யப்பட்டார். கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய இவர் யார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெல்ல பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே அங்குப் பல பரபர சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காத ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பல வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருப்பார்கள். அங்கு எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது அப்படிதான் இருக்கும்.

பாஜக எம்எல்ஏ

பாஜக எம்எல்ஏ

இதனிடையே மைசூரு சாண்டல் சோப் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கும் கர்நாடகா அரசின் கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் (கேஎஸ்டிஎல்) தலைவராக தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதியின் பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா பொறுப்பு வகித்து வந்தார். இவரது மகன் பிரசாந்த் மதல், பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்காளராக வேலை செய்து வருகிறது.

அதிரடி கைது

அதிரடி கைது

இதற்கிடையே விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மதல் சொப்பு நிறுவனத்தின் டெண்டர் வழங்க ஒருவரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கினார். அப்போது அவரை அதிரடியாகக் கைது செய்த லோக்ஆயுக்தா போலீசார், அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடி, வீட்டில் இருந்து ரூ.6 கோடி என மொத்தம் ரூ.7.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

யார் இந்த விருபாக்ஷப்பா

யார் இந்த விருபாக்ஷப்பா

இதையடுத்து விருபாக்ஷப்பா கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகினார். கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய இவர் யார் என்பது குறித்துப் பார்க்கலாம். கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் விருபாக்ஷப்பா. 2008ஆம் ஆண்டு சென்னகிரி தொகுதி வென்ற இவர், இருப்பினும், அடுத்து நடந்த 2013இல் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து மீண்டும் அவர் 2018 தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனார்.

விருபாக்ஷப்பா சொத்து மதிப்பு

விருபாக்ஷப்பா சொத்து மதிப்பு

2018 தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, ​​விருபாக்ஷப்பாவின் சொத்து மதிப்பு ₹ 5.73 கோடி எனக் கூறப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் அவரது மகனிடம் அலுவலகத்தில் இருந்து 6 கோடி ரூபாய்க்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. 58 வயதான இவர், பிரபல மைசூர் சாண்டல் சோப்பைத் தயாரிக்கும் கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) என்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அவரது மகன் பிரசாந்த் மடல் தொடர்பான ஊழல் தலைப்புச் செய்தியாக வந்ததை அடுத்து அவர் இன்று காலை பதவியை ராஜினாமா செய்தார்.

மறுப்பு

மறுப்பு

இருப்பினும், இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். இன்று நடத்தப்பட்ட சோதனைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று அவர் கூறுகிறார். லோக்ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு இந்த சோதனைகளை நடத்தியது. அவர் முதல்வருக்கு எழுதிய தனது ராஜினாமா கடிதத்தில், "லோக்ஆயுக்தா சோதனைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிரான சதி. என் மீது சந்தேகம் இருப்பதால் கேஎஸ்டிஎல் போர்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+