"தப்பு பண்ணிட்டாங்க".. மைசூரில் பாஜகவை திக்கி திணற வைத்த ராமதாஸ்.. கர்நாடக அரசியலில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் அடுத்தடுத்து முக்கிய உறுப்பினர்கள் வெளியேறுவதால் பின்னடைவை சந்தித்து வரும் பாஜக, இன்னொரு முக்கியமான சிக்கலையும் அங்கே எதிர்கொண்டு உள்ளது.
கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
சில நாட்களுக்கு முன் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. 10 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. காங்கிரசில் இருந்து பாஜக வந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து கடந்த வாரம் 23 பேரின் பெயர் கொண்ட இரண்டாம் பட்டியல் வெளியிடப்பட்டது. முதல் கட்ட பட்டியலில் 189 பேரில் 10 எம்எல்ஏக்கள் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இரண்டாவது கட்டமாக வெளியிடப்பட்ட 23 எம்எல்ஏக்கள் பட்டியலில் 6 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 16 எம் எல்ஏக்கள் வாய்ப்பை இழந்து உள்ளனர்.

இதையடுத்து நேற்று முதல்நாள் இரவு 23 பேரின் பெயர் வெளியிடப்பட்டது. முதல் கட்ட பட்டியலில் 189 பேரில் 10 எம்எல்ஏக்கள் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இரண்டாவது கட்டமாக வெளியிடப்பட்ட 23 எம்எல்ஏக்கள் பட்டியலில் 6 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 16 எம்எல்ஏக்கள் வாய்ப்பை இழந்து உள்ளனர்.
கடலோரப் பகுதிகளில்தான் பாஜக கொஞ்சம் ரிஸ்க் எடுத்துள்ளது, ஏனென்றால் அங்கே பாஜகவிற்கு ஏற்கனவே நல்ல ஆதரவு உள்ளது.
இதையடுத்து நேற்று 10 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மைசூரில் இருக்கும் கிருஷ்ணராஜா தொகுதியில் ஸ்ரீவஸ்தவா போட்டியிடுவார் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் ராமதாஸ். 1994, 1999, 2008, 2018ல் இங்கிருந்துதான் ராமதாஸ் எம்எல்ஏவாக தேர்வானார். பாஜகவில் இருக்கும் முக்கியமான மூத்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.
முக்கியமாக மைசூரில் இவர் மிகவும் பிரபலமான, முக்கியமான அரசியல்வாதி. அந்த தொகுதி பிராமணர்கள் அதிகம் உள்ள தொகுதி என்றாலும் பிராமணர் அல்லாத ராமதாஸ்தான் அதிக பவர் கொண்ட அரசியல் தலைவராக அங்கே இருந்தார்.
இந்த நிலையில்தான் அவருக்கு சீட் கொடுக்காமல் ஸ்ரீவஸ்தவா என்ற புதிய முகத்திற்கு பாஜக வாய்ப்பு அளித்து உள்ளது. இவர் பிராமணர் என்பதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதனால் தற்போது ராமதாஸ் அங்கே கடும் அப்செட்டில் இருக்கிறாராம். பாஜக தலைவர்களை சந்திக்காமல் தவிர்த்து வருகிறாராம். அதோடு உள்ளூர் பாஜக தலைவர்களுடன் தனி மீட்டிங் போட்டு.. எனக்கு சீட் கொடுக்காமல் தப்பு செய்துவிட்டனர். இத்தனை காலம் இங்கே பாஜக ஜெயிக்க நான்தான் காரணம் என்று கூறி.. உள்ளூர் தலைவர்களுடன் சேர்ந்து மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு செல்லும் திட்டத்திலும் இருக்கிறாராம்.
மைசூரில் ராமதாஸ் பல பாஜக தலைவர்களை வளர்த்துள்ளார். அவரைத்தான் தற்போது பாஜக கைவிட்டு உள்ளது. இன்று தனது அடுத்தகட்ட முடிவை ராமதாஸ் அறிவிப்பார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அங்கே பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்து உள்ளார். அதேபோல் முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவடி இதேபோல் ஓரம்கட்டப்பட்டு தற்போது காங்கிரசில் இணைந்து உள்ளார்.
அதேபோல் என்ஆர் சந்தோஷ் மதசார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் ராமதாசும் கட்சி மாறும் திட்டத்தில் உள்ளதால் பாஜக கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
-
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications