ஜஸ்ட் 8 நிமிஷத்தில்.. அரசு ஊழியர் செய்த "சம்பவம்".. பெங்களூர் பெண் ஆபீஸரால் தலைசுற்றிபோன கர்நாடகா
பெங்களூர்: வெறும் 8 நிமிடத்தில் இப்படி ஒரு சம்பவமா என்று அதிர்ந்து போய் கிடக்கிறது கர்நாடக மாநில போலீஸ்..!!
கர்நாடகா சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குநரான பிரிதிமா 8 நிமிடங்களில் குத்திக் கொலை செய்யப்பட்டதாக பெங்களூரு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மிகப்பெரிய அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார் பிரதிமா.. அம்மாநில அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பணிபுரிபவர்.. 45 வயதாகிறது.
நவம்பர்: பெங்களூருவில உள்ள தொட்டகல்லாசந்திராவில் வசித்து வருகிறார்.. ஆனால், கடந்த நவம்பர் மாதம், இவரை யாரோ கொலை செய்துவிட்டார்கள்.. அவரது வீட்டிலேயே கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றிருக்கிறார்கள்.. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டபோதுதான், வீட்டிலிருந்த தங்கநகைகள், உட்பட ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
பிறகு, தீவிர விசாரணையின்பேரில், கிரண்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். பிரதிமா பணிபுரியும் நிறுவனத்திலேயே டிரைவராக முன்பு வேலை பார்த்தவர் இந்த கிரண் குமார்.. 31 வயதாகிறது.. பிரதிமாவை கொலை செய்ததை போலீசிலும் ஒப்புக் கொண்டார். அத்துடன், இந்த கொலைக்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
டிரைவர்: ஏற்கனவே டிரைவராக பணிபுரிந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார் கிரண்குமார்.. எனவே, மறுபடியும் தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று பிரதிமாவிடம் கேட்டு கொண்டேயிருந்தாராம். இதற்காக பிரதிமா வீட்டில் பல மணி நேரம் காத்திருந்தாராம்.. ஆனால், தவறு செய்ததால்தான் வேலையிலிருந்து நீக்கியதாகவும், மீண்டும் வேலையில் அமர்த்த முடியாது என்றும் பிரதிமா உறுதியாக சொல்லியிருக்கிறார்.
தனக்கு வேலை தர மறுத்த ஆத்திரத்தில், அவரை கொன்றுவிட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் கிரண்குமார். அதாவது, பிரதிமாவை கிரண் வெறும் 8 நிமிடங்களில் கொலை செய்தாராம்.. இது தொடர்பான குற்றப்பத்திரிகையை பெங்களூரு போலீஸார் தற்போது தாக்கல் செய்திருக்கிறார்கள்..
ஆவணங்கள்: இந்த சம்பவம் நடந்து தற்போது 3 மாத காலமாகிறது.. இந்த 3 மாதமும் விசாரணைகள் நடந்து முடிந்த நிலையில், மொத்தம் 70 சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வாக்குமூலங்களுடன் 600 பக்க ஆவணத்தை போலீஸார் சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "2 வருஷமாக பிரதிமாவின் அதிகாரப்பூர்வ கார் டிரைவராக கிரண் வேலை பார்த்து வந்தார்.. பலமுறை கவனக்குறைவாக காரை ஓட்டியிருக்கிறார்.. இதற்காக பிரதிமா அவரை பலமுறை திட்டியுள்ளார்.. அதனால்தான், இந்த வேலையில் இருந்து கிரணை அவர் டிஸ்மிஸ் செய்திருக்கிறார்.
குற்றப்பத்திரிகை: மறுபடியும் வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு, பிரதிமாவிடம் கிரண் கேட்டு வந்துள்ளார்.. ஆனால், பிரதிமா சம்மதிக்கவில்ல.. அதனால்தான், பிரதிமா மீது ஆத்திரம் ஏற்பட்டு கொலை வரை சென்றுள்ளார்.. பிரதிமாவின் வீட்டிற்குள் நுழைந்து 8 நிமிடங்களில் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.. இதுதான் குற்றப்பத்திரிகையில் பதிவாகி உள்ளது" என்றனர். வெறும் 8 நிமிடத்தில் ஆவேசமாக கத்தியால் குத்தப்பட்டு, பெண் அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications