முதலிரவுக்கு முன்பே.. ரூமில் புதுமண தம்பதி.. திடீர்னு சத்தம்.. கதவை திறந்து பார்த்தால்? அட கொடுமையே
பெங்களூர்: திருமணம் முடிந்து புதுமண தம்பதிகள் தனியறையில் இருந்திருக்கிறார்கள்.. அப்போதுதான், திடீரென அலறல் சத்தம் கேட்டு, ஒட்டுமொத்த திருமண வீடும் நிலைகுலைந்து போய்விட்டது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், கேஜிஎஃப் தாலுக்காவில் உள்ளது சம்பரசனஹள்ளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நவீன்.. 24 வயதாகிறது.. அதேபோல, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பைனாபள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லகிதா ஸ்ரீ.. 21 வயதாகிறது.

காதல்: இவர்கள் இருவருமே நீண்ட காலமாகவே காதலித்து வந்தார்கள்.. பலமுறை தனிமையான உறவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்..
இதற்காக தங்களது குடும்பத்தினரிடம் பேசி, இரு தரப்பிலிருந்தும் ஒப்புதலையும் பெற்றார்கள். இதையடுத்து, நேற்றைய தினம் திருமண தேதி குறிக்கப்பட்டு, இந்த ஜோடிக்கு வெகுசிறப்பாக நேற்று காலை திருமணமும் நடந்தேறியது.
சடங்குகள்: நவீனின் தும்பரசனஹள்ளி கிராமத்திலேயே இந்த திருமணம் ஜரூராக நடைபெற்றிருக்கிறது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த தம்பதி, தனியறையில் இருந்துள்ளனர்.
தம்பதி தனிமையில் பேசிக்கொண்டிருப்பதால், குடும்பத்தினரும் அடுத்தடுத்த சடங்குகளை செய்வதில் மும்முரமாகி கொண்டிருந்தனர். அப்போது புதுமண தம்பதிக்குள் ஏதோ வாக்குவாதம் நடந்துள்ளது. பிறகு, திடீரென ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக் கொண்டார்கள். பிறகு அலறல் சத்தமும் கேட்டது.

இதனால் அதிர்ந்துபோன உறவினர்கள், கதவை தட்டிப்பார்த்தும் யாரும் திறக்கவில்லை.. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.. அப்போது புதுமண தம்பதி இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு கதறினார்கள்..
மணமக்கள் : பிறகு இருவரையும் ராபர்ட்சன் பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் மணமகள் லகிதாஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்றும், நவீன் நிலைமை சீரியஸாக இருப்பதால், உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோலார் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் அறிவுறுத்தினார்கள்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., சாந்தராஜு நேரடியாகவே மருத்துவமனைக்கு கிளம்பி வந்து, இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளார்.. பிறகு செய்தியாளர்களிடம் சொன்ன எஸ்.பி. சாந்தராஜு, "மணமகன் நவீன் ஆந்திர மாநிலம், சந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். மணமகள், தங்கவயல், பைனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்.
அலறல் சத்தம்: இவர்களது திருமணம், நவீனின் சகோதரி மோனிகாவின் வீடு இருக்கும் சம்பரசன ஹள்ளியில் காலை 7.30 மணிக்கு நடந்துள்ளது. சம்பரசன ஹள்ளியில் மோனிகாவுக்கு தெரிந்த ஒருவரது வீட்டில், மணமக்கள் மாலை 5 மணி வரை இருந்திருக்கிறார்கள்.. இருவரும் சந்தோஷமாகவே இருந்திருக்கிறார்கள். 5.30 மணிக்குதான் பயங்கர கூச்சல், அலறல் சத்தம் கேட்டிருக்கிறது.. இதனால் அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது, மணப்பெண் தலை, கழுத்து, கை, கால், முதுகு ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டுடனும், மணமகன் தலை, கை, தோள்பட்டை பகுதியில் கத்தி வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதில், மணமகள் உயிரிழந்துள்ளார். நவீனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை.. அவருக்கு சிகிச்சை முடிந்து நினைவு திரும்பிய பிறகே, சம்பவத்துக்கான காரணம் தெரியவரும்" என்றார்.
கொடுமை : புதுமண தம்பதிக்கு இடையேயான மோதலுக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த அதிர்ச்சி சம்பவம் இரு குடும்பத்தினரிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்யாணமாகி ஒரே நாளில் நடந்த மரணம் கர்நாடக மாநிலத்தை உலுக்கி எடுத்து வருகிறது.
ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.. இதில், முதலில் கொடூரமாக தாக்கப்பட்டது மணமகள் லிகிதா என்கிறார்கள்.. லிகிதாவை தாக்கிய பிறகே, நவீன் தன்னைத்தானே தாக்கிக்கொண்டிருக்கலாம் என்றும், இன்னும் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாகவும் போலீஸ் முதல்கட்டமாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தாய் மாமா: இந்த ஜோடிக்கு 4 மாதங்களுக்கு முன்கே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாம்.. இதுகுறித்து உறவினர் வெங்கடேஷ் என்பவர் சொல்லும்போது, "எங்கள் இரு குடும்பங்களிலுமே எந்தவிதமான பிளவுகள், கருத்து வேறுபாடுகள் கிடையாது.. இதனால் நாங்கள் இரு தரப்பிலுமே கடுமையான அதிர்ச்சியில் உள்ளோம்" என்கிறார்.
கல்யாணம் முடிந்ததுமே, மதிய உணவிற்கு பிறகு, தாய் மாமா வீட்டிற்கு அழைத்து சென்றார்களாம்.. அங்கு மணமக்களுக்கு கூல் டிரிங்க்ஸ், டிபன் தந்துள்ளார்கள்.. அவைகளை சாப்பிட்டுவிட்டு, ரூமில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள். அப்போதுதான் திடீரென நவீன் அந்த ரூம் கதவை திடீரென உள்ளிருந்தே மூடினாராம்.
தாக்குதல்: அடுத்த சில நிமிடங்களிலேயே மணமகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, நவீன் லிகிதாவை அரிவாளால் தாக்குவதை கண்டார்களாம். அதற்கு பிறகே கதவை தட்டி முயற்சித்து, பிறகு உள்ளே உடைத்து கொண்டு சென்றதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications