மனைவியின் முறையற்ற உறவு.. நள்ளிரவில் மயானத்துக்குள் ஆண் நண்பருடன் வந்த "ஸ்வீட்டி".. அதென்ன கையில்?
பெங்களூர்: சுடுகாட்டுக்கு நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் வந்துள்ளார் ஸ்வீட்டி.. இது தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை தந்துவருகிறது.
நாளுக்கு நாள் கள்ளக்காதல் கொலைகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.. நம்முடைய தமிழகத்திலும், கடந்த 2018-ல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குன்றத்தூர் அபிராமி சம்பவம்.

கள்ளக்காதல்: தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற 2 குழந்தைகளையும், பாலில் விஷம் வைத்து கொன்றவர் இந்த குன்றத்தூர் அபிராமி. இது தொடர்பான வழக்கு நடந்து முடிந்துள்ள நிலையில், அபிராமி மீது குற்றமும் நிரூபணமாகி விட்டது. ஆனால், இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை. இன்னும் தண்டனையும் தரப்படவில்லை.. ஒவ்வொரு தாமதமான தீர்ப்புதான், இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடப்பதற்கு காரணமாகி கொண்டிருக்கின்றன
உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளை, பெற்ற தாயே துடிதுடிக்க கொல்வதையும், சித்ரவதை செய்வதையும் ஜீரணிக்கவே முடிவதில்லை.. இதுபோன்ற "அபிராமிகளின்" அட்டகாசங்களும் இன்னமும் அடங்குவதில்லை... வடமாநிலங்களிலும் அபிராமிகள் இருக்கவே செய்கிறார்கள். இதோ பெங்களூரில் நடந்த கொடுமையை பாருங்கள்.
ஆண் குழந்தை: பெங்களூரின் டி.ஜே.ஹள்ளியில் வசித்து வரும் பெண் ஸ்வீட்டி.. இவருக்கு 24 வயதாகிறது.. கணவரின் பெயர் சிவு.. இந்த தம்பதிக்கு 2 வயதில் கபிலா என்ற பெண் குழந்தையும், 11 மாதத்தில் கபிலன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.. இந்நிலையில், ஸ்வீட்டிக்கு, கிரகோரி பிரான்சிஸ் என்ற 27 வயது நபருடன் தகாத உறவு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கணவரை விட்டுவிட்டு, கள்ளக்காதலனுடனேயே செல்ல முடிவு செய்தார்.
அதனால், 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, கள்ளக்காதலருடன் சென்றுவிட்டார் ஸ்வீட்டி.. இதற்கு நடுவில் மனைவி, குழந்தைகளை காணாமல், கணவர் பதறிப்போனார்.. எங்கெங்கோ தேடியும் கிடைக்காததால், டி.ஜெ.ஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.. போலீசாரும் இந்த புகாரை விசாரிக்க துவங்கினர்.

வாடகை வீடு: ஆனால், வீட்டை விட்டு வெளியேறிய ஸ்வீட்டி, ராம்நகரின் கெம்பேகவுடா சதுக்கம் அருகில் மஞ்சுநாத நகரில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.. கள்ளக்காதலன், தன்னுடைய குழந்தைகளுடன் ஸ்வீட்டி அந்த வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்.. கடந்த 15 நாட்களுக்கு முன்பு 2 வயது மகள் கபிலா உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டாளாம்.
அதனால், அன்றைய தினம் நள்ளிரவு, கபிலாவின் சடலத்தை ஸ்வீட்டியும், பிரான்சிசும் ராம்நகரின் மயானத்துக்கு கொண்டு வந்து எரித்துள்ளனர்.. பிறகு, 11 மாத குழந்தையான கபிலன் உடலை, நேற்று காலை அதே மயானத்துக்கு கொண்டு வந்து எரித்துள்ளனர்.. இதனால் அந்த மயானத்தில் இருந்த செக்யூரிட்டிக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால், இந்த கள்ள ஜோடியிடமே வந்து, குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று விசாரித்திருக்கிறார்.
செக்யூரிட்டி: தன்னுடைய 2 குழந்தைகளுமே உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டதாக ஸ்வீட்டி சொல்லி உள்ளார்... எனினும், வெறும் 15 நாள் இடைவெளியில், 2 குழந்தைகளும் எப்படி இறக்க முடியும்? என்று செக்யூரிட்டிக்கு சந்தேகம் வலுத்துள்ளது.. அதுவும் இல்லாமல், குழந்தைகளை சுடுகாட்டில் நள்ளிரவில் கொண்டு வந்து ஏன் எரிக்க வேண்டும்? உடல்நிலை சரியில்லையானால், மற்ற உறவினர்கள் எங்கே? என்றெல்லாம் சந்தேகம் கிளம்பியிருக்கிறது.
அப்போதுதான், குழந்தையின் சடலத்துக்கு தீவைத்து எரிக்கும்போது, அவர்களின் உடம்பில் காயங்கள் இருப்பதையும் செக்யூரிட்டி கவனித்திருக்கிறார்.முதல் குழந்தைக்கும் இப்படித்தான் காயங்கள் இருந்துள்ளது.. இப்போது 2 வது குழந்தைக்கும் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதற்கு பிறகு போலீசார், ஸ்வீட்டியையும், பிரான்சிசையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போதுதான் குழந்தைகளை ஈரவிரக்கமின்றி கொலை செய்தது அம்பலமானது. தங்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால், 15 நாட்களுக்கு முன்பு, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் ஸ்வீட்டி..
கள்ளக்காதல்: இதேபோன்று நேற்றுமுன்தினம் இரவும் உல்லாசமாக இருந்தபோது, குழந்தை கபிலன் அழுதானாம்.. இதனால் கோபமடைந்த இருவரும், குழந்தையை அடித்து, கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்களாம். இதை போலீஸில் வாக்குமூலமாக சொன்னதையடுத்து, இந்த கள்ள ஜோடி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது.. இந்த நாசமா போன கள்ளக்காதலுக்கு இன்னும் எத்தனை பிஞ்சுகள் காவு வாங்கப்படுமோ? தெரியவில்லை.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications