மனைவியின் "வீடியோ கால்".. ஓயாமல் வந்து நின்று.. அதென்ன தோட்டத்தில் "இலை" அசையுது.. தடுமாறிய கணவன்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முன்னெடுத்துள்ளனர்.
அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ காலில் பேசுவதாக சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சி: கர்நாடகா மாநிலம், ராமநகர மாவட்டத்தில் உள்ளது மதுகிரிஹள்ளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ரமேஷ்.. இவருக்கு 32 வயதாகிறது.. மனைவி பெயர் அஸ்வினி.. இவருக்கு 27 வயதாகிறது.. கல்யாணமாகி 10 வருடங்கள் ஆன இந்த தம்பதியின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்தது.
சமீபகாலமாகவே, எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கியிருப்பதாக தெரிகிறது.. இதனால், கடந்த சில நாட்களாகவே ரமேஷுக்கும், அஸ்வினிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது... செல்போனில் எந்நேரமும் ஏன் பேசிக் கொண்டிருக்கிறாய்? அடிக்கடி யாரிடம் வீடியோ காலில் பேசுகிறாய்? என்று அஸ்வினியிடம் ரமேஷ் சண்டை போட்டிருக்கிறார்..
நீடித்த சண்டை: நாளுக்கு நாள் இந்த சண்டை அதிகரித்துவிட்டதால், ஒருகட்டத்தில் வெறுப்படைந்த அஸ்வினி, மேனேவிலுள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டார்... இதற்கு பிறகு, கடந்த 18-ம் தேதி மாமியார் வீட்டுக்கு சென்ற ரமேஷ், அஸ்வினியை சமாதானம் செய்தார்.. இனிமேல் சண்டை போடமாட்டேன் என்று சத்தியம் செய்து, அஸ்வினியை மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில், அஸ்வினிக்கு அவரது பெற்றோர் போன் செய்திருக்கிறார்கள்.. ஆனால், பலமுறை போன் போட்டும் அஸ்வினி எடுக்கவில்லை.. இதனால் மகளுக்கு என்ன ஆச்சோ? என்று பதறிக்கொண்டு அவரது பெற்றோர் நேற்றைய தினம் ரமேஷ் வீட்டிற்கு கிளம்பி வந்திருக்கிறார்கள்.. ஆனால், வீட்டில் ரமேஷ், அஸ்வினி இருவருமே இல்லை. இதனால் மேலும் பதறிப்போன பெற்றோர், இருவரையும் தேட துவங்கினார்கள்.
இலைகள்: அப்போதுதான், அந்த வீட்டின் பின்பக்கம் ஒருகுழியை இலைகளை போட்டு மூடியிருப்பதை பார்த்தனர்.. இதனால் சந்தேகமடைந்து, அந்த இலைகளை விலக்கிவிட்டு, பள்ளத்தை தோண்டி பார்த்தனர்... அதில், அஸ்வினியின் சடலம் கிடந்ததை கண்டு அலறினார்கள். அஸ்வினி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.. இதையடுத்து, சன்னப்பட்டணா கிராமிய போலீசார் விரைந்து வந்து, அஸ்வினியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்கையும் பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் ரமேஷ் தலைமறைவாகிவிட்டார்.. எனினும் இந்த விசாரணையை போலீசார் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
சந்தேகம்: அதாவது, முன்பின் தெரியாதவர்களுடனும், அறிமுகம் இல்லாத நபர்களுடன், வீடியோ காலில் அஸ்வினி பேசிவந்ததாக ரமேஷ் சந்தேகப்பட்டு வந்தாராம்.. அதனால்தான், மனைவியை அடித்து கொன்று, மண்ணில் புதைக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது ரமேஷை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications