சித்தராமையா டிகே சிவக்குமார் இருவருக்கும் ஸ்வீட் நியூஸ்.. புது பார்முலாவுடன் காங்கிரஸ் தலைமை
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் இருவரையும் சமாதானப்படுத்தும் விதமாக புது பார்முலாவுடன் கட்சி தலைமை முடிவை அறிவிக்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்ற நிலையில், அங்கே முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.

இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் தங்கள் தலைவருக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், கட்சி எம்.எல்.ஏக்கள் மேலிடத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளனர். கட்சி மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோர் கலந்து கொண்டர். புதிய முதல்வராக யாரை நியமிக்கலாம் என்று புதிய எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் கருத்துக்களை கேட்டனர்.
அந்த கருத்துகளை பதிவு செய்து கொண்ட அவர்கள் நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை மேலிட பார்வையாளர்கள் நேரில் சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்தனர். சோனியா காந்தியிடம் ஆலோசனை பெற்ற பிறகு மல்லிகார்ஜூன் கார்கே, முதல்வரை அறிவிப்பார் என்று தெரிகிறது.
முதல்வராக சித்தராமையா அறிவிக்கப்படவே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. டிகே சிவக்குமாரும் இதையே சூசகமாக குறிப்பிட்டார். அதேவேளையில் இரு தரப்பையும் திருப்தி படுத்தும் வகையில் புதிய பார்முலாவை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அதாவது சித்தராமையாவிற்கு முதல் 2.5 வருடங்களும் அடுத்த 2.5 வருடங்கள் டிகே சிவக்குமாருக்கும் பதவி வழங்கப்படலாம் என்று காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கு காரணம் டிகே சிவக்குமாருடன் சித்தராமையாவை ஒப்பிடும் போது அவருக்கு வழக்குகள் எதுவும் இல்லை. எனவே சித்தராமையா முதல் சாய்சாக இருப்பார் எனத்தெரிகிறது. அதேவேளையில், டிகேசிவக்குமாரை பொருத்தவரை கட்சியை வலுப்படுத்துவதில் வியூகம் வகுப்பதில் சிறந்து விளங்குபவர். எனினும், டி.கே.சிவக்குமார் மீது வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அமைப்புகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டிகே சிவக்குமாருக்கு இருக்கும் வழக்குகளால் வரும் நாட்களில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா போல் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. டிகே சிவக்குமாருக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக அவருடன் மோதல் போக்குடன் செயல்பட்ட கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் சிபிஐ இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவை எல்லாம் டி.கே.சிவக்குமாருக்கு பலவீனமாக உள்ளது. எனவே காங்கிரஸ் மேலிடம் இத்தகைய முடிவை எடுக்கும் என்று மேலிடத்தில் பேசப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications