எந்த அடிப்படையில் 3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் .. கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் பரபரப்பு பேட்டி
பெங்களூரு: கர்நாடகாவில் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்ளை தகுதி நீக்கம் நீக்கம் செய்தது எந்த அடிப்படையில் என்பது குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிருப்தி எம்ல்ஏக்கள் வாக்களிக்காத காரணத்தால் கவிழ்ந்தது.
இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கம் பணிகளை கர்நாடகா சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் தொடங்கி உள்ளார். இதுவரை மூனறு எம்எல்ஏக்களை கட்சி தாவல் நடவடிக்கையின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

தகுதி நீக்கம் செய்கிறேன்
இது தொடர்பாக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "சுயேட்சை எம்எல்ஏ சங்கர் கடந்த ஜுன் 14ம் தேதி காங்கிரஸ் கட்சியில் அவரது கட்சியான கேபிபேஜி கட்சியை இணைந்துவிட்டார். இதன்படி அவர் கடந்த ஜூன் 25ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏவாக மாறினார் ஆவார். ஆனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு பாஜகவுக்கு கடந்த ஜூலை 16ம் தேதி ஆதரவு அளித்தார் என சித்தராமையா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காங்கிரஸ எம்எல்ஏ சங்கரை தகுதி நீக்கம் செய்துள்ளேன்.

ராஜினாமா முறையாக இல்லை
அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க இரண்டு நாள் தாமதம் செய்ததை பல வருடம் தாமதம் என்பது போல் மக்கள் பேசினார்கள். கட்சிக்கு எதிராக அவர்கள் கடந்த பிப்வரியில் புகார் தெரிவித்தார்கள். அதன்பின்னர் ஜூலையில் ராஜினாமா செய்தார்கள். ஆனால் அவர்களின் ராஜினாமா முறைப்படி இல்லை. அதை மீண்டும் சமர்ப்பிக்கும்படி கேட்டேன்.

ஒப்புக்கொண்டார்கள்
ஆனால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் அணுகிறார்கள் . அப்போது அவர்கள் நான் சந்திக்க நேரம் கொடுக்கவில்லை என பொய்யான வாக்குமூலத்தை அங்கு சமர்பித்தனர். ஆனால் அவர்களை நீதிமன்றம் என்னிடம் ஆஜராகுமாறு அறிவுறுத்தியது. அதன்படி வந்தவர்களிடம் நீங்கள் என்னிடம் நேரம் கேட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு இவர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்கள். இதேபோல் ராஜினாமா முறையான வடிவத்தில் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்கள்.

தேர்தலில் போட்டியிட முடியாது
ரிய சொல் தகுதி நீக்கம் என்பது கண்டிப்பு ஆகும். காங்கிரஸ் எம்எல்ஏ சங்கரை தகுதி நீக்கம் செய்துள்ளேன். இதேபோல் அதிருப்தி எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரையும் தகுதி நீக்கம் செய்கிறேன். இவர்கள் 3 பேரும் இந்த சட்டசபை காலம் முடியும் வரை இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்கள் ஆக முடியாது.

2023 வரை எம்ஏல்ஏ ஆக முடியாது
சட்டசபை கலைக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும். நான் இவர்களின் ராஜினாமாவை நிராகரித்தேன். ஆனால் அவர்கள் தாங்களாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார்கள் என்று ஒரு அனுமானத்திற்கு வந்தேன். அதன்பிறகு ஆதாரங்களின் அடிப்படையில் நான் அவர்களை தகுதி நீக்கம் செய்தேன். அவர்கள் 10வது அட்டவணையின் விதிகளை மீறியுள்ளதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு தற்போது இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது மற்றொன்று உயர்நீதிமன்றத்தில் முறையிடுவது.

அரசு ஸ்தம்பித்துவிடும்
இப்போது கவிழ்ந்துள்ள அரசு ஜுலை 31வரை மசோதாவை நிறைவேற்ற முயலலாம். நிதி மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் அரசு ஸ்தம்பித்துவிடும். இந்த நிதி மசோதா நிறைவேற அனைத்து தரப்பும் ஏற்பாடு செய்ய வேண்டும் . எனது பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேன். என்னிடம் ஒத்துழைப்பை நாடினால் நான் கொடுப்பேன். ஜனாதிபதி ஆடசி நடந்தாலும், சட்டசபையில் நிதி மசோதவை நிறைவேற்ற முடியும்" இவ்வாறு கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications