ரூட் கேனால் சிகிச்சையால் பிரபல நடிகையின் முகம் வீங்கியது ஏன்?.. மருத்துவர் இத்தனை கவனக்குறைவா?
பெங்களூர்: பெங்களூரில் பல் வலிக்கு சிகிச்சை பெற்ற பிரபல நடிகை சுவாதியின் முகம் வீங்கியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
பெங்களூர் ஜே பி நகரில் வசித்து வருபவர் சுவாதி. இவர் கன்னட நடிகை. ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டது.
இதற்காக அவர் ஹெண்ணூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஒரு மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

ரூட் கேனால் சிகிச்சை
அப்போது பல் வலிக்கு ரூட் கேனால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு பல்லில் ரூட் கேனால் சிகிச்சை செய்ய மயக்க ஊசியை போட்டுவிட்டுள்ளார். இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவுடன் சுவாதியின் முகம் வீங்கியது.

20 நாட்களாகியும் சரியாகவில்லை
ஆனாலும் சரியாகவில்லை. இதனால் சுவாதி கடந்த 20 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். 20 நாட்களாகியும் முகம் சரியாகாததால் அவர் மீண்டும் மருத்துவமனையை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு யாரும் சரியாக பதில் சொல்வது இல்லை என்றும் சுவாதி குற்றம்சாட்டை முன் வைத்துள்ளார்.

சாலிசிலிக் ஆசிட்
இதையடுத்து பொருத்தது போதும் என நினைத்த சுவாதி வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது சுவாதிக்கு மயக்க ஊசிக்கு பதிலாக சாலிசிலிக் ஆசிட்டை (Salicylic Acid) அந்த மருத்துவர் செலுத்தியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து புதிய மருத்துவமனையில் அந்த மருத்துவர் சிகிச்சை அளித்து தற்போது மெதுவாக நலமடைந்து வருகிறார் சுவாதி.

சாலிசிலிக் ஆசிட்டின் நன்மைகள் என்ன
சாலிசிலிக் ஆசிட் என்பது முகத்தில் உள்ள முகப் பருவை குணப்படுத்த பயன்படுத்தக் கூடியது. தோலில் ஊடுருவி சென்று முகப் பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும். அது போல் தோலில் அதிக எண்ணெய் உற்பத்தியை குறைக்கும். தோலில் உள்ள துளைகள் எப்போதும் திறந்திருக்க உதவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications