Gowri serial: "கௌரி" சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்தது ஏன்? கடிதம் சிக்கியது!
பெங்களூர்: கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "கௌரி" எனும் சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது அறையிலிருந்து தற்கொலை கடிதமும் கைப்பற்றப்பட்டது.
பெங்களூரை சேர்ந்தவர் நந்தினி. இவர் கன்னடம், தமிழ் மொழிகளில் சீரியல்களில் நடித்து வந்தார். கௌரி சீரியலில் நந்தினி, துர்கா எனும் கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாராம்.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் நந்தினி தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. தற்கொலை செய்வதற்கு முன்பு துர்கா ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது: திருமணம் தொடர்பாக என்னை பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். எனக்கு திருமண விஷயத்தில் எனது விருப்பங்களை கேட்கவில்லை. சொந்தமாக முடிவெடுக்கவும் குடும்பத்தினர் தடையாக இருந்தனர் உள்ளிட்ட விஷயங்களை அவர் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நந்தினி தந்தையின் மரணத்திற்கு பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாராம். குடும்பத்தினர் திருமணத்திற்கு வற்புறுத்தியது, குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களால் நந்தினி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
நந்தினியின் தந்தை பள்ளி ஆசிரியராக இருந்தாராம். அவர் பணியில் இருந்த போதே இறந்துவிட்டாராம். தனது நடிப்பு கனவுக்கு உயிர் கொடுத்த தந்தையை இழந்த பிறகு நந்தினி மனதளவில் பாதிக்கப்பட்டாராம்.
கருணை அடிப்படையில் தனது தந்தையின் ஆசிரியர் வேலை, நந்தினிக்கு கிடைத்தது. ஆனால் நடிப்பதில்தான் நந்தினிக்கு ஈடுபாடு இருந்ததாம். இதனால் அந்த வேலையை வேண்டாம் என சொல்லிவிட்டாராம். இதனால் நடிப்பதை விட்டுவிட்டு டீச்சர் வேலைக்கு போ என குடும்பத்தினர் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
நந்தினிதான் அவரது குடும்பத்திற்கு மூத்த மகளாம். அவருக்கு ஒரு தங்கை இருக்கிறாராம். இதனால் நந்தினிக்கு தனது குடும்பத்தின் பாரத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டாராம். இதையும் தனது கடமையாக ஏற்று உழைத்து வந்த நிலையில் நடிப்புக்கு வீட்டில் தடை போட்டது அவரை கவலைக்குள்ளாக்கிவிட்டதாம்.
இந்த விவகாரத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறதாம். நந்தினி கடைசியாக எங்கு சென்றுவிட்டு வந்தார்? யாருடன் போனில் பேசினார் உள்ளிட்ட தகவல்களை எல்லாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications