அப்படியே திரும்பி.. கிரவுண்டிற்கு வெளியே அடித்த எடப்பாடி! கர்நாடகாவில் ஷாக்காகி நின்ற பாஜக.. அடிதூள்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு ஷாக் கொடுக்கும் விதமாக தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவால் பாஜக ஒரு பக்கம் அரண்டு போய் உள்ளது.
கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

அங்கே தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை, வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்னும் 1 நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் கடைசி கட்ட வேட்பாளர் பட்டியல்களை கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜகவை ஆதரிக்குமா, இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுக போட்டியிடுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்த நிலையில்தான் எடப்பாடி இந்த முடிவை துணிச்சலாக எடுத்துள்ளார்.
தமிழர்கள் அதிகம்: தமிழர்கள் அதிகம் இருக்கும் இந்த தொகுதியில் அதிமுக தனித்து நிற்பது பாஜகவிற்கு பெரிய பின்னடைவை கொடுக்கும். தமிழர்கள் வாக்குகள் இதனால் வெகுவாக பிரியும்.
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் உள்ள, பெங்களூரு, உத்தர கன்னடா, தாவணகெரே 7, ஷிவமொகா, உடுப்பி உள்ளிட்ட 10 மாவட்டங்கள் அண்ணாமலைக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சரியாக பெங்களூருக்கு கீழ் வரும் புலிகேசி நகரில்தான் எடப்பாடி வேட்பாளரை அறிவித்து உள்ளார்.
அண்ணாமலையுடன் எடப்பாடி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்ணாமலைக்கு செக் வைக்கும் விதமாக எடப்பாடி இந்த முடிவை எடுத்துள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக - அண்ணாமலை இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும்.

எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.
கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை.
தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அமித் ஷா பேச்சு: இதையடுத்து பேசிய அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். இதை வழி மொழிந்த எடப்பாடியும்.. பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் திடீரென அப்படியே திரும்பி பாஜகவிற்கு எதிராகவே அதிமுக சார்பாக எடப்பாடி வேட்பாளரை களமிறக்கி உள்ளார்.
சமீபத்தில் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாக அண்ணாமலை மறைமுகமாக கருத்து சொன்னார்.
அவர் தனது பேட்டியில், ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும். திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை.
இது பார்ட் 1னுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம், என்று கூறினார்.

எடப்பாடி கோபம்: இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அண்ணாமலை பெயரை கேட்டதும் கோபம் அடைந்த எடப்பாடி தனது பேட்டியில், அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீங்க. அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.
முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். அவர் இப்படி பேசி பேசித்தான் பிரபலம் ஆகி உள்ளார். அவர் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகி உள்ளார்.
அவர் ஊழல் பட்டியலை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்து பட்டியலை வெளியிட்டதாகவே தெரிகிறது என்று எடப்பாடி கூறினார். இந்த மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி உள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications