டிவி பார்த்தபோது மனைவி கேட்ட ஒற்றை கேள்வி.. ஐஏஎஸ் பதவி ராஜினாமா ஏன்? சசிகாந்த் செந்தில் விளக்கம்
பெங்களூர்: திருவள்ளூர் லோக்சபா தொகுதி எம்பியாக காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் உள்ளார். இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் ஆக பணியாற்றி திடீரென்று ராஜினாமா செய்து வந்து காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் தான் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை முதல் முறையாக சசிகாந்த் செந்தில் விளக்கி உள்ளார். அதன்படி டிவி பார்த்து கொண்டிருந்தபோது மனைவி கேட்ட ஒற்றை கேள்வி தான் அவரை ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். அப்படி அவரிடம் மனைவி என்ன கேள்வி கேட்டார்? வாங்க பார்க்கலாம்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியின் எம்பியாக இருப்பவர் சசிகாந்த் செந்தில். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 2020ம் ஆண்டில் அவர் திடீரென தனது ஐஏஎஸ் பதவிக்கு ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் வார்ரூம் தலைவராக செயல்பட்டார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான வார்ரூம் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
தங்க அரண்மனை + 7,000 கார்.. மோடி சந்திக்கும் புருனே சுல்தானின் ஆடம்பர வாழ்க்கை தெரியுமா? இதை படிங்க
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 7,96,956 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கியபாஜகவின் பொன் வி பாலகணபதி 2,24,801 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் சசிகாந்த் செந்தில் 5,72,155 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் சசிகாந்த் செந்தில் நேற்று கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருக்கு சென்றார். காங்கிரஸ் சார்பில் நடந்த நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்த மாவட்டத்தை அவரால் ஒருபோதும் மறக்க முடியாது. நெருக்கமானதாகும். ஏனென்றால் இந்த மாவட்டத்தின் கலெக்டராக சசிகாந்த் செந்தில் பணியாற்றி இருந்தார். அதுமட்டுமின்றி இந்த மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது தான் அவர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்.
ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்கணும்.. மீறினால் மெட்ரோ திட்டத்தை தடுப்போம்.. மிரட்டும் வாட்டாள் நாகராஜ்
இதுவரை ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை சசிகாந்த் செந்தில் வெளிப்படையாக கூறியது இல்லை. ஆனால் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியினரின் ஆலோசனை கூட்டத்தில் அவர் அதுபற்றி வெளிப்படையாக பேசினார். மேலும் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது பற்றி முதல் முறையாக விளக்கமளித்தார். இதுபற்றி சசிகாந்த் செந்தில் கூறியதாவது:

நான் இங்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. காங்கிரஸ் மீது விருப்பம் ஏற்பட்டு தான் இந்த கட்சியில் சேர்ந்தேன். இந்த மாவட்டத்தில் இருந்து தான் நான் எனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதினேன். எனது ராஜினாமா தொடர்பாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் நான் இன்று வரை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
சூப்பர் மார்க்கெட்களில் மாஸ்க்கிற்கு தடை.. காரணத்தை பாருங்க.. பெங்களூரில் இப்படியெல்லாமா நடக்குது?
இன்று நான் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை கூற விரும்புகிறேன். நான் ஒரு தலித் குடும்பத்தை சேர்ந்தவன். நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். என் தந்தை அனைத்து விதமான கஷ்டங்களையும் அனுபவித்துள்ளார். நான் ஐஏஎஸ் ஆனபிறகு மக்கள் மீது அக்கறையுடன் செயல்பட்டேன். நான் மாவட்ட கலெக்டராக இருந்தபோது, குழந்தைகளை நினைத்து இரவு தூங்குவது வழக்கம். மழைக்காலங்களில் எல்லாம் டிடிபிஐக்கு போன் செய்து பள்ளிக்கு விடுமுறை அளிக்க சொன்னேன். ஒருமுறை தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து 17 நாட்கள் விடுமுறை அளித்திருந்தேன்.
நான் மக்களின் உணர்வுகளை அதிகம் மதிக்கிறேன். ஆனால் மக்களை உயர்த்தும் அரசியலை என்னால் பார்க்க முடியவில்லை. 2002 கோத்ரா கலவரத்தை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். 2014ல் கோத்ரா கலவரக்காரர் (மறைமுகமாக பிரதமர் மோடியை குறிப்பிடுகிறார்) இந்தியாவின் பிரதமரானார். அப்போது நான் ராய்ச்சூரில் கலெக்டராக இருந்தேன். அதன்பிறகு 2019 தேர்தலில் நான் தட்சிண கன்னடா கலெக்டராக இருந்தேன். அந்த சமயத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் அதிக ஓட்டுகள் பெற்று ஆட்சியை பிடித்தது. மீண்டும் அவர் பிரதமரானார்.
மோடி பிரதமரான பிறகு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. அதுமட்டுமின்றி காஷ்மீரில் பலரும் ராணுவ பாதுகாப்பில் வீட்டு காவலில் வைக்கப்பட்னர். காஷ்மீரில் இன்று நடக்கும் இந்த சம்பவம் நாளை மங்களூரிலும் நடக்கலாம் என்று நினைத்தேன். இந்த நேரத்தில் என் மனைவி மங்களூருக்கு வந்தார். மங்களூரில் நாங்கள் டிவி பார்த்து கொண்டிருந்தோம். டிவியில் காஷ்மீரில் ராணுவம் தொடர்பான செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
இந்த வேளையில் எனது மனைவி, ‛‛கல்லூரி நாட்களில் செந்தில் எப்படி இருந்தாய்? கல்லூரியில் ஆக்ரோஷமாக இருந்த நீங்கள் இப்போது அரசு பங்களாவில் அமைதியாக கலெக்டராக மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி அன்றைய இரவு முழுவதும் எனக்கு அதிக வலியை கொடுத்தது. மறுநாள் காலை எழுந்ததும்என் மனைவியிடம் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொன்னேன். அதன்பிறகு எனது பணியை முடித்துவிட்டு 3 நாட்களுக்குள் ராஜினாமா செய்தேன். பிறகு சொந்த ஊர் சென்றேன். காங்கிரஸ் கட்சியில் சரியானது என உணர்ந்து அதில் சேர்ந்தேன். காங்கிரஸ் கட்சி என்னை அழைக்கவில்லை. நான் தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்’’ என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications