சூப்பர் மார்க்கெட்களில் மாஸ்க்கிற்கு தடை.. காரணத்தை பாருங்க.. பெங்களூரில் இப்படியெல்லாமா நடக்குது?
பெங்களூர்: பெங்களூரில் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாஸ்க் கட்டாயம் என்று போர்டு வைக்கப்பட்ட நிலையில் தற்போது மாஸ்க் அணிந்து செல்ல கூடாது என எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது அதன் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்க்.. ஒரு காலத்தில் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர்களில் மட்டுமே மருத்துவர்கள் அணிந்து வந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதன்பிறகு வெளிநாடுகளில் வசிப்போர் பொது இடங்களில் மாஸ்க் அணிந்திருப்பதை நாம் கவனித்து இருப்போம்.

ஆனால் கொரோனா எப்போது பரவ தொடங்கியதோ அதில் இருந்து மாஸ்க்கை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். வீடு, பொது இடங்கள் அனைத்திலும் நாம் மாஸ்க் அணிந்து சென்று வந்தோம். தற்போது கொரேனா அச்சுறுத்தல் இல்லை. இதனால் நம்மில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணிவதை விட்டு விட்டோம்.
ஆனாலும் கூட இன்னும் பலர் பொது இடங்களில் தங்களின் பாதுகாப்பு கருதி மாஸ்க் அணிந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் தான் பெங்களூர் கெங்கேரி உள்பட சில இடங்களில் அமைந்து இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மாஸ்க் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டுகளின் நுழைவு வாயிலிலேயே No Mask Allowed என்று எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் செல்லும் மக்கள் மாஸ்க் கழற்றிவிட்டு தான் உள்ளே நுழைகின்றனர். மேலும் மாஸ்க் கழற்றாவிட்டால் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றுவோர் அதனை கழற்றும்படி சொல்கின்றனர். சூப்பர் மார்க்கெட்டுகளின் இத்தகைய நடவடிக்கை தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி விசாரித்தபோது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி கெங்கேரியில் மாஸ்க் அணிய தடை விதித்துள்ள சூப்பர் மார்க்கெட் ஊழியர் கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 சூப்பர் மார்க்கெட்டுகளில்ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போய் உள்ளது. மாஸ்க் அணிந்து வருபவர்கள் தங்களின் முகத்தை மறைத்து பொருட்களை திருடி தாங்கள் கொண்டு வரும் பேக் அல்லது அணிந்திருக்கும் ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்கின்றனர்.
அதன்பிறகு விலை குறைந்த 2 பொருட்களை எடுத்து பில் போட்டுவிட்டு வெளியேறுகின்றனர். மாஸ்க் அணிந்து திருடி செல்லும் நபர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்தோம். ஒவ்வொரு நபர்களும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி செல்கின்றனர். இதுபற்றி போலீசில் புகாரளித்தும் மதிப்பு குறைவு என்பதால் அவர்கள் வழக்குப்பதிவு செய்வது இல்லை. இதனால் தான் மாஸ்க் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications