Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க அரண்மனை + 7,000 கார்.. மோடி சந்திக்கும் புருனே சுல்தானின் ஆடம்பர வாழ்க்கை தெரியுமா? இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய பிரதமர்கள் யாரும் இதுவரை புருனேவுக்கு சென்றது இல்லை. முதல் முதலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே நாட்டுக்கு சென்றுள்ளார். அவர் புருனேவின் சுல்தான் என அழைக்கப்படும் ஹசன்லால் போல்கியாவை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி சந்திக்கும் புருனேவின் சுல்தான் ஹசனால் போல்கியாவின் ஆடம்பர வாழ்க்கை பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம் நாட்டை போல் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த நாடு தான் புருனே. இந்த நாடு என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. மலேசியா அருகே அமைந்துள்ள புருனேவை கடந்த 1888 ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்தனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து 1984ம் ஆண்டு தான் விடுதலை பெற்றது.

narendra modi brunei

சுதந்திரம் பெற்றது முதல் அன்று முதல் இந்தியா - புருனே இடையே வெளியுறவுத்துறை சார்ந்த தூதரக உறவு என்பது இருந்து வருகிறது. புருனே நாட்டின் சுல்தானாக ஹசனல் போல்கியா இருந்து வருகிறார். இந்த நாட்டின் மக்கள் தொகை என்பது மிகவும் குறைவாகும். மொத்த மக்கள் தொகை என்பது வெறும் 4.50 லட்சம் தான்.

புருனே சுல்தானாக இருக்கும் ஹசனால் போல்கியா கடந்த 2018 ல் நம் நாட்டில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆனால் புருனே சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவை சேர்ந்த எந்த பிரதமரும் புருனே நாட்டுக்கு சென்றது இல்லை. கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே நாட்டுக்கு சென்றார். புருனே நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தருசலாம் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவரை பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முஹ்ததீ பில்லா வரவேற்றார்.

narendra modi brunei

இதையடுத்து பிரதமர் மோடி புருனே நாட்டின் சுல்தான் ஹசனால் போல்கியாவை சந்தித்து பேச உள்ளார். இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது பற்றி இருவரும் விவாதிக்க உள்ளனர். இத்தகைய சூழலில் தான் புருனே நாட்டின் சுல்தான் ஹசன்லால் போல்கியாக பற்றிய பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: பொதுவாக நம் நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் என்ற பொறுப்புகள் தான் உயரிய பொறுப்பாக உள்ளன. ஆனால் புருனேவை பொறுத்தவரை சுல்தான் என்பது தான் உச்சபட்ச பதவியாகும். சுல்தான் என்பது இஸ்லாமிய மன்னராட்சி முறையில் உயரிய பதவியில் இருப்பவர்களை குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

புருனேவில் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நிலையில் தான் 1984ல் சுதந்திரம் அடைந்தது முதல் அந்த நாட்டின் உச்சபட்ச பதவியில் இருக்கும் ஹசனல் போல்கியா புருனேவின் சுல்தான் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இன்னும் எளிமையாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் புருனேவில் சுல்தான் என்பவர் அந்நாட்டு அரசின் தலைவர் என்றும், அந்நாட்டின் பிரதமர் என்றும் வைத்து கொள்ளலாம்.

இந்நிலையில் தான் புருனேவின் சுல்தான் ஹசனால் போல்கியாவின் ஆடம்பரமான ‛லைப் ஸ்டைல்' அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளன. அதாவது ஹசனால் போல்கியாவின் மொத்த சொத்து மதிப்பு என்பது 2.5 லட்சம் கோடியாகும். அவரிடம் மொத்தம் 7 ஆயிரம் கார்கள் உள்ளன. இவை அனைத்தும் சொகுசு கார்களாகும். அதிலும் ரோல்ஸ் ராய்ஸ் மட்டும் 600 கார்கள் இருக்கின்றன. 450 ஃபெராரிஸ், 380 பென்ட்லிஸ் கார்கள் உள்ளன. இதுதவிர லாம்போர்கினிஸ், போர்ஸ், மேபேக், ஜாகுவார், பிஎம்டபிள்யூ மற்றும் மெக்லாரன் உள்ளிட்ட பிராண்டுகளின் கார்கள் உள்ளன.

narendra modi brunei

மேலும் ரூ.80 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம்) மதிப்பிலான பென்ட்லி டோமினேட்டர் எஸ்யூவி கார் , போர்ஸ் 911, 24காரட் தங்க முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஸ்பர் II கார்களையும் அவர் வைத்துள்ளார். அதோடு ரோல்ஸ் ராய் காரில் சன்ரூப்பில் தங்க முலாம் பூசப்பட்ட குடையுடன் கூடிய காரையும் அவர் வைத்துள்ளார். இந்த கார்களை பராமரிக்க மொத்தம் 110 கேரேஜ்கள் இருக்கின்றன. ஏசி வசதி செய்யப்பட்ட 200 குதிரை லாயம் (HorseStables) உள்ளன. அதேபோல் போயிங் 747 ஜெட்டை அவர் சொந்தமாக வைத்துள்ளார். மேலும் இவர் சொந்தமாக மிருகக்காட்சி சாலையை வைத்துள்ளார். இங்கு 30 பெங்கால் டைகர்ஸ் உள்ளன. இதுதவிர ஏராளமான பறவைகள் அங்கு உள்ளன.

மேலும் உலகிலேயே மிகப்பெரிய அரண்மனையில் தான் அவர் வசித்து வருகிறார். தற்போது மும்பையில் உள்ள பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானியின் அன்டிலியா அடுக்குமாடி குடியிருப்பு வீடு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பை கொண்டுள்ள நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அரண்மனை ரூ.12 ஆயிரம் கோடிக்கு கட்டப்பட்டுள்ளது என்றால் அதில் உள்ள வசதிகள் எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்து கொள்ளுங்கள்.

இந்த அரண்மனையின் பெயர் இஸ்தானா நூருல் இமான். இந்த அரண்மனை என்பது புருனேவின் தலைநகர் பண்டர் சேரி பெக்வான் அருகே உள்ளது. மொத்தம் 2 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) சதுர அடி கொண்ட இந்த அரண்மனையில் மொத்தம் 1,788 அறைகள், 257 குளியலறைகள், 5 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் பெரிய ஹால் உள்ளது. இந்த அரண்மனை என்பது 40 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.12 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த அரண்மையின் மேல்புறத்தில் உள்ள குவிமாடம் (Dome) 22 காரட் தங்கத்தால் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரண்மனையில் பெரிய மசூதி உள்ளது. 5 நீச்சல் குளங்கள் இருக்கின்றன.

narendra modi brunei

பிலிப்பைன்ஸ் கட்டிடக்கலைஞர் லியானார்டோ லோக்சின் வடிவமைத்த இந்த அரண்மனை அந்நாட்டின் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. புருனேயின் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மலாய் மரபுகளின் கலவையாக இந்த அரண்மனையின் கட்டிடக்கலை இருக்கிறது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த அரண்மனையில் தான் பிரதமர் மோடி இன்று புருனேவின் சுல்தான் ஹாஹி ஹசனல் போல்கியாவை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+