கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து!
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பாதிப்பு மீண்டும் கேரளாவில் தலைதூக்கியுள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 40 வயது மதிக்கத்தக்க நபருக்குத் திடீரென நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் சூழலில், மாநிலத்தில் தீவிர கண்காணிப்புப் பணிகளும் தொடங்கியுள்ளது.
கொரோனா பரவலுக்குப் பிறகு ஒவ்வொரு வைரஸ் பாதிப்பையும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. ஏனென்றால் கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை நாம் இழந்திருந்தோம். இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவுகிறது. இதனால் மாநிலத்தில் உச்சக்கட்ட அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளா
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது முதற்கட்டச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று வெளியான இந்தத் தகவல், அம்மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தற்போது அந்த நபர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த மாதிரிகள் முதற்கட்ட சோதனையில் 'பாசிட்டிவ்' என்று வந்துள்ள போதிலும், வைரலாஜி ஆய்வகத்திலிருந்து இறுதிக்கட்ட முடிவுக்கு அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
முன்னெச்சரிக்கை
இருப்பினும், முதற்கட்டச் சோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளதால் கேரளச் சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தவர்கள் யார் யார் என்பதை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடையாளம் காணப்பட்ட நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவாமல் தடுக்கத் தேவையான பகுதிகளில் தனிமை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
நிபா வைரஸ் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வகை வைரஸ் ஆகும். இது முதன்மையாகப் பழம் தின்னும் வௌவால்கள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சில், சிறுநீர் அல்லது அவை கடித்த பழங்களை மனிதர்கள் உட்கொள்ளும் போது இந்த வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு நெருக்கமான தொடர்பு மூலம் இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவக்கூடும்.
நிபா வைரஸ்
நிபா வைரஸ் ஏற்படுத்தும் உயிரிழப்புகள் மிக அதிகமாகும். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதுவரை நிபா வைரஸிற்குத் தடுப்பூசிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், இதற்கு என்று பிரத்தியேகமான மருந்துகள் கிடையாது. நோயாளியின் அறிகுறிகளுக்கு ஏற்பவே சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
கேரளா, குறிப்பாக கோழிக்கோடு மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக நிபா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. 2018, 2019, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் கேரளாவில் மொத்தம் 31 பேருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டது. இதில் துரதிர்ஷ்டவசமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா
நிபா வைரஸ் ஆபத்தானது என்றாலும், கேரளா ஏற்கனவே நான்கு முறை இந்தத் தொற்றைக் கையாண்ட அனுபவம் கொண்டது. இதனால் அம்மாநிலத்தில் மிகவும் வலுவான கண்காணிப்பு மற்றும் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள வழக்கும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications