சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
சென்னை: தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை மறைந்தார். அவரது உடலுக்கு இன்று காலை முதலே பல்வேறு தரப்பினரும் இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர். இதற்கிடையே இன்றிரவு அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் சூழலில், நாளை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
ஸ்டுடியோக்களுக்குள் இருந்த தமிழ் சினிமாவைக் கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா (84) இன்று காலை சென்னையில் காலமானார். கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகையும், ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜா
பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டவுடன், தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக நேரில் சென்று, பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு, தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாரதி ராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும், இன்று மாலை தவெக அமைச்சர்களான ராஜ்மோகன், சி.டி.ஆர். நிர்மல்குமார், புஸ்ஸி ஆனந்த் மற்றும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதா, அவரது உடலைப் பார்த்து நெஞ்சடைத்து உருகி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கலங்கடித்தது.
சொந்த ஊர்
இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்குப் பிறகு, இன்று இரவு அவரது சொந்த ஊரை நோக்கிப் புறப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் பாரதிராஜா உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியில் 1942ம் ஆண்டு பிறந்த பாரதிராஜாவுக்கு, தனது சொந்த மண்ணின் மீது எப்போதுமே அதீத பிரியம் உண்டு. 1977ல் '16 வயதினிலே' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியவர், கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை எனப் பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.
மனோஜ் பாரதிராஜா
கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா உயிரிழந்தார். அந்தச் சோகத்திலிருந்து மீளாத பாரதிராஜா, அதன் பிறகு உடல்நலக் குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை தரப்பட்ட போதிலும், அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நாளை இறுதி சடங்கு
சென்னையிலிருந்து எடுத்துச் செல்லப்படும் அவரது உடல், நாளை காலை தேனி மாவட்டத்திற்குச் சென்றடையும் என தெரிகிறது. அங்குள்ள அவரது சொந்த ஊரில், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, நாளை தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் அவருடைய இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தெரிகிறது. தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலம், தன் சொந்த மண்ணை நோக்கித் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது!
-
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்! -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
மனோஜின் காலை நள்ளிரவில் அமுக்கிய டைரக்டர் பாரதிராஜா.. "என்னப்பா செய்றீங்க?" உருகிய தந்தை பாசம் -
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
"எங்கே பாரதிராஜா? இனி நான் என்ன பதில் சொல்வேன்?” கதறிய வைரமுத்து... கண்கலங்க வைத்த இறுதி மரியாதை! -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர்












Click it and Unblock the Notifications