வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!
சென்னை: தமிழக அரசியலில் அடுத்த முக்கியமான அரசியல் நிகழ்வாக உள்ளாட்சி தேர்தல் பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணி தொடர வேண்டுமா அல்லது தனித்துப் போட்டியிட வேண்டுமா என்ற விவாதம் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கட்சியின் உண்மை பலத்தை நிரூபிக்க உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் சூழலுக்கு திமுக வந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சுமார் 25க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்த போதிலும், ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தோல்விக்கான காரணங்களை ஆராயும் பணியை கட்சி தலைமை தொடங்கியிருந்தது.

இதற்காக தொகுதி வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளும் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்தனர்.
திமுக
தேர்தல் காலத்தில் கூட்டணி கட்சிகளின் செயல்பாடு எப்படி இருந்தது, வாக்கு பரிமாற்றம் நடந்ததா, களப்பணிகளில் ஒருங்கிணைப்பு இருந்ததா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின் போது, பல மாவட்டங்களில் இருந்து ஒரே மாதிரியான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை என்றும், பல இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிப்பு பணிகளில் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் நிர்வாகிகள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல்
சில மாவட்ட நிர்வாகிகள், "திமுகவின் வாக்கு வங்கி இன்னும் வலுவாகவே உள்ளது. ஆனால் கூட்டணி அரசியலால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் போன்ற அடிமட்ட தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்காக இடங்களை ஒதுக்குவதால், நமது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தி உருவாகிறது" என்ற கருத்தை முன்வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், "உள்ளாட்சி தேர்தல் என்பது கட்சியின் அமைப்பு பலத்தை நிரூபிக்கும் தேர்தல். இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டால் மட்டுமே திமுக தனது உண்மையான பலத்தை வெளிப்படுத்த முடியும்" என்று பலரும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி
இதற்கிடையில், கூட்டணி அரசியலை முழுமையாக கைவிடுவது சரியான முடிவாக இருக்காது என்று சில மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநில அரசியலில் கூட்டணிகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் கூட கூட்டணி தொடர்வது எதிர்கால தேர்தல்களுக்கு உதவக்கூடும் என்ற கருத்தும் கட்சிக்குள் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கள ஆய்வு குழுவிடம் கருத்து தெரிவித்த பெரும்பாலான நிர்வாகிகள், இனி வரும் தேர்தல்களில் திமுக தனித்து களம் காண வேண்டும் என்றே வலியுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
திமுக வியூகம்
குறிப்பாக உள்ளாட்சி தேர்தல், நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி தேர்தல்களில் கட்சி தனித்துப் போட்டியிட்டால், தொண்டர்களின் உற்சாகமும் அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மறுசீரமைக்கும் பணிகளில் தி.மு.க. தலைமை கவனம் செலுத்தி வரும் நிலையில், நிர்வாகிகளின் இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கள ஆய்வு குழுவின் முழுமையான அறிக்கை விரைவில் கட்சி தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அறிவாலயம்
அந்த அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை திமுக கூட்டணியுடனா அல்லது தனித்து சந்திக்கப் போகிறது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழலில் திமுக வரும் உள்ளாட்சி தேர்தலை தனித்தே தான் சந்திக்கும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications