பெங்களூருக்கு "செம டிமாண்ட்!" வீட்டு வாடகை சர்ரென அதிகரிப்பு.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பல இடங்களில் சொத்து வாடகை உயர்ந்துள்ளன. 30-40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. வீடுகளின் வாடகை, அலுவலக வாடகை என அனைத்து வகையான வாடகைகளும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பின் போது பஸ், ட்ரெயின் இல்லாமல் ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக பெங்களூரு நகரை விட்டு டிராக்டர்களிலும், மாட்டு வண்டிகளிலும் சொந்த ஊருக்கு சென்று சேர்ந்தனர். வாடகை வீடுகள் அனைத்தும் காலி செய்யப்பட்டன. வாடகை மூலம் வரும் வருமானத்தை கொண்டு காலத்தை தள்ளியவர்கள் வருமானம் இல்லாமல் குறைந்தபட்ச வாடகைக்கு வீட்டை விட்டனர். ஆனால், தற்போது கொரோனா தொற்று ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது.

இந்நிலையில் இந்த வாடகையானது மெல்ல உயர்ந்து தற்போது புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. நாள்தோறும் பெங்களூர் நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காகவும் இதர தேவைகளுக்காகவும் படையெடுத்து வருகின்றனர். எனவே வாடகை வீடுகளுக்கான டிமாண்டும் அதிகரித்துள்ளது. இதற்கேற்றார் போல வாடகையும் அதிகரித்துள்ளது. இது குறித்து ஒயிட்ஃபீல்டு பகுதி குடியிருப்பாளர்கள் கூறுகையில், "நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில்தான் வசித்து வருகிறோம். ஆனால் தற்போது திடீரென வாடகை 30-40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. நாங்கள் ரூ.14,000க்கு வாடகைக்கு இருந்து வருகிறோம். தற்போது இந்த வாடகையை ரூ.22,000ஆக ஹவுஸ் ஓனர் அதிகரித்துள்ளார். இது ஏறத்தாழ 57% அதிகமான வாடகையாகும். எங்களால் இந்த வீட்டிற்கு இவ்வளவு அதிகமாக வாடகை கொடுக்க முடியாது. எனவே நாங்கள் வீட்டை விட்டு காலி செய்கிறோம்" என்று கூறியுள்ளார். இது வெறும் 1BHKவின் நிலைமைதான்.

நோ ப்ரோக்கர் என்ன சொல்கிறது?

நோ ப்ரோக்கர் என்ன சொல்கிறது?

இது குறித்து NoBroker தளத்தின் இணை நிறுவனர் சவுரப் கார்க் கூறுகையில், "இந்த வாடகை உயர்வு பெரும்பாலும் புதியதாக வருபவர்களுக்கும், பல ஆண்டுகளாக குறைந்த வாடகையில் இருந்து வருவோருக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும். மற்றபடி கடந்த ஆண்டே அதிக தொகை கொடுத்த வாடகையில் இருந்தவர்கள் இந்தமுறை கவலையடைய வேண்டியது கிடையாது. ஏனெனில், அவர்களுக்கு இம்முறை வாடகை உயர்த்தப்படாது. அதாவது அதிகப்பட்ச வாடகை தொகை என ஒரு அளவு இருக்கிறது. தற்போது இந்த அளவை நோக்கி அனைத்து பணக்காரர்களும், நிலம்/ கூடுதல் வீடு வைத்திருப்பவர்களும் நகர்கின்றனர். ஆனால் ஏற்கெனவே அதிக தொகையில் இருப்பவர்களுக் இந்த பிரச்னை கிடையாது" என்று கூறியுள்ளார்.

 மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

இது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "கல்யாண் நகரில் உள்ள HRBR லேஅவுட்டில் ஒரு வீட்டை போன வருஷம் ரூ.20,000 ஆயிரத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள். ஆனால் இந்த வரும் தடாலடியாக இந்த வாடகை தொகை ரூ.40,000ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவரான விவேக் ரதி கூறுகையில், "பெங்களூரை பொருத்த அளவில் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. ஆனால் சப்ளை அதற்கு ஏற்றாற்போல இல்லை. வொர்க் ப்ரம் ஹோமிலிருந்த ஊழியர்கள் தற்போது அலுவலகங்களுக்கு திரும்பியுள்ளனர். எனவே அவர்களுக்கு வீடு தேவைப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அளவுக்கு இங்கு வாடகைக்கு வீடுகள் இல்லை. எனவே டிமாண்ட் அதிகமாக இருப்பதால் வாடகை விடுபவர்கள் இதனை பயன்படுத்தி அதிக வாடகையை வசூலிக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

 நிலைமை என்ன?

நிலைமை என்ன?

இப்படியாக வாடகைக்கு வீடு/அலுவலகம் தேடி அலைபவர்கள் ஆன்லைன் வழியாக குறிப்பிட்ட வீட்டையோ/அலுவலகத்தையோ பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு செல்கின்றனர். சென்று வீட்டை பார்த்த பின்னர், "இது ஏற்கெனவே வேறு ஒருவரால் புக் செய்யப்பட்டுவிட்டது. வேண்டுமானால் கூடுதல் தொகை கொடுத்தால் கொடுக்கிறோம்" ஓனர்கள் கூறுவதாக புலம்புகிறார்கள். இது ஒரு ஏமாற்று வேலை என்றும் வீடு தேடி அலைபவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நிறைய கண்டிஷன்கள்

நிறைய கண்டிஷன்கள்

அப்படியே வீடு கிடைத்தவிட்டாலும் கூட, "என்ன சாதி? என்ன மதம் என்பதை பார்த்துதான் வீடு கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள்" என்று கூறியுள்ளார். ஆக பெங்களூரில் வாடகைக்கு விடும் அளவுக்கு வீடு வைத்திருப்பவர்கள் காட்டில் தற்போது மழை பெய்துக்கொண்டிருக்கிறது. வீடு தேடுபவர்கள் நொந்துபோயுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+