Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் ஏன் இந்தியில் பேசணும்.. இது எங்க நிலம்" ஆட்டோ டிரைவர் கேட்ட கேள்வி! பெங்களூரில் எழுந்த வாய்ஸ்!

இந்தி விவகாரம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆட்டோவில் ஏறிய பயணிகளிடம் இந்தி குறித்து பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக இந்தி மொழியைத் திணிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தே வருகிறது. தமிழ்நாடு இந்தி திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது.

இப்போது தான் மற்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் எழத் தொடங்கியுள்ளது. அப்படித்தான் இப்போது நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இந்தி திணிப்புக்கு எதிராகக் குரல் எழுந்துள்ளது.

 இந்தி விவகாரம்

இந்தி விவகாரம்

இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி திணிக்கப்படுவதாகப் புகார்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழ்நாடு சுதந்திர காலத்தில் இருந்தே இந்தி திணிப்பிற்கு எதிராகவே இருந்துள்ளது. திராவிட கட்சிகள் இந்தி திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். அதேபோல தமிழ்நாட்டில் இப்போது வரை இரு மொழி கொள்கையே அமலில் இருக்கிறது. மற்ற பெரும்பாலான விஷயங்களில் திமுக, அதிமுக நேர் எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் கூட இந்தி திணிப்பு என்று வரும் போது ஒரே அணியில் நிற்கிறது.

 பரபர வீடியோ

பரபர வீடியோ

கடந்த அதிமுக ஆட்சியில் கூட இந்தி திணிக்கப்படுவதாகப் புகார் எழுந்த போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி தமிழ்நாட்டில் என்றும் இரு மொழிக் கொள்கை தான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தமிழ்நாடு இந்தி திணிப்பிற்கு எதிராக உறுதியாக இருக்கும் நிலையில், இப்போது தான் மெல்ல மற்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்பிற்கு எதிரான குரல் கொடுத்து வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 வாக்குவாதம்

வாக்குவாதம்

தனது ஆட்டோவில் ஏறிய பயணிகள் கன்னடத்திற்குப் பதிலாக இந்தியில் பேசியதால் டென்ஷனான ஆட்டோ ஓட்டுநர் இந்தியில் பேசுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ கர்நாடகாவில் சரியாக எங்கே நடந்தது என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் பெங்களூர் என நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர், "இது கர்நாடகா.. நீங்கள் கன்னட மொழியில் தான் பேச வேண்டும். நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்" என்று கூறுகிறார். அதை பயணம் செய்த பெண் பயணிகள்தான் வீடியோவாக எடுத்துள்ளனர். இரு தரப்புக்கும் எப்படி, ஏன் இந்த வாக்குவாதம் தொடங்கியது என்பது தெரியவில்லை எனினும், டிரைவர் பேசத் தொடங்கிய பிறகு உள்ள காட்சிகள்தான் சுற்றி வருகின்றன.

 நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்

நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்

அதற்கு ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் பயணி, "முடியாது.. நாங்கள் கன்னடத்தில் பேச மாட்டோம்" என்று கூறுகிறார்.. மேலும் டிரைவரிடம் அந்த பெண், "நாங்கள் ஏன் கன்னடத்தில் பேச வேண்டும்" என்று கேட்கிறார். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர், "நீங்கள் வட இந்தியர்கள், இது எங்கள் நிலம், உங்கள் நிலம் அல்ல, இங்கு நீங்கள் கன்னடத்தில் பேச வேண்டும்.. அதைவிட்டுவிட்டு என்னை ஏன் இந்தியில் பேசச் சொல்கிறார்கள். நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்" என்று கேட்கிறார். இது தான் அந்த வீடியோவில் இருக்கிறது.

 பரபர குற்றச்சாட்டு

பரபர குற்றச்சாட்டு

இருப்பினும் இந்த வீடியோவை முதலில் பகிர்ந்த ட்விட்டர் யூசர், வட இந்தியர்கள் பிச்சைக்காரர் என்றும் இது எங்கள் நிலம் என்றும் ஆட்டோ டிரைவர் சொல்லியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இது ஆட்டோ டிரைவரின் வார்த்தைகள் இல்லை என்றும் இது இங்கு வசிக்கும் அனைத்து மக்களின் மனநிலை என்றும் அவர் குறிப்பிடுகிறார். கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்வதற்கும் மற்றவர்களைக் கன்னடம் பேசும்படி கட்டாயப்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும், அமித் ஷா, பிரதமர் அலுவலகத்தையும் டேக் செய்துள்ளார்.

 யார் மீது தவறு

யார் மீது தவறு

இந்த வீடியோ இப்போது மிக வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், சம்பவத்தின் முழு வீடியோ இல்லை. இதனால் யார் மீது தவறு என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெண் பயணிகள் ஆட்டோ டிரைவரை இந்தியில் பேசும்படி கூறியது போலவே வீடியோவில் இருக்கிறது. இருப்பினும், ட்வீட்டில் அந்த ஆட்டோ டிரைவரே கன்னடத்தில் பேச வற்புறுத்தியதாகக் கூறியுள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் யார் மீது தவறு.. யார் யாரை வற்புறுத்தினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 நாடாளுமன்ற குழு

நாடாளுமன்ற குழு

முன்னதாக கடந்தாண்டு நாடாளுமன்றக் குழு சமீபத்தில் அளித்த பரிந்துரை ஒன்று சர்ச்சையானது. அதாவது, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி அல்லது அங்குள்ள உள்ளூர் மொழியைப் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தது. மேலும், ஆங்கிலத்தை ஆப்ஷனலாக வைக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரத்திலும் அப்போதையே பல இந்தி பேசாத மாநில முதல்வர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+