"200 யூனிட் இலவச மின்சாரம்!" வேண்டாம் என அலறும் உரிமையாளர்கள்! புலம்பும் பெங்களூர்வாசிகள்! என்னாச்சு
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் அரசு 200 யூனிட் இலவச மின்சாரத்தை அறிவித்துள்ள போதிலும், பல இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வாடகை வீடுகளுக்கு இலவச மின்சாரம் கோரி விண்ணப்பிக்கவில்லை. இதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் கடந்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.. 5 முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்து காங்கிரஸ் இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் வெற்றிக்கு இந்த 5 வாக்குறுதிகளும் முக்கிய காரணமாக இருந்தது.
சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தவுடன் சொன்னபடி 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

இலவச மின்சாரம்: அதில் முக்கியமான ஒன்று அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட் இலவச மின்சாரம். க்ருஹ ஜோதி என்ற இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நகர்ப்புறம், கிராமப்புறம் என எங்கு இருந்தாலும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறையைக் கர்நாடக மின்சார வாரியம் இப்போது தொடங்கியுள்ளது.
இருப்பினும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாநிலத்தில் இருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் அனைவரும் தயக்கம் காட்டுகிறார்களாம் குறிப்பாகப் பெங்களூரில் உள்ள வீடுகளின் உரிமையாளர்கள் இதற்குத் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அரசின் திட்டத்தின் பலனை அங்கு வாடகை வீட்டில் குடியிருப்போரால் பெற முடியாமல் போகிறது.
என்ன பிரச்சினை: ஏனென்றால் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் வாடகை மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதை வீட்டின் உரிமையாளர்கள் சொல்லியாக வேண்டும். அப்படி வீட்டின் வாடகையை வெளிப்படுத்தினால் அது தங்களை வருமான வரி பிரச்சினையில் கொண்டு வந்துவிடும் என்று வீட்டின் உரிமையாளர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.
இதன் காரணமாகவே கர்நாடகாவில் பெங்களூர் உட்பட முக்கிய பிற நகரங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிப்பதைத் தவிர்த்தே வருகின்றனர். அதேபோல வாடகை வீட்டில் வசிப்போரும் இதற்கு அப்ளை செய்யக் கூடாது என்று வாடகைதாரர்களுக்கு உரிமையாளர்கள் நெருக்கடி தருவதாகவும் கூறப்படுகிறது.
சில இடங்களில் உரிமையாளர்கள் இழப்பீடாக மின்சார கட்டணத்திற்குப் பதிலாக வாடகையைச் சற்று குறைத்துக் கொள்கிறார்களாம். இருப்பினும், எல்லா இடங்களிலும் நிலைமை இது இல்லை. பல பகுதிகளில் ஓனர் இலவச மின்சாரத்திற்கும் அப்ளை செய்வதில்லை. வாடகையிலும் சலுகையை அறிவிப்பதில்லையாம். இதனால் வாடகை வீடுகளில் வசிப்போர் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் விளக்கம்: இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அதிகாரிகள் இது குறித்து விளக்கமும் அளித்திருந்தனர். அதாவது வீட்டின் உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தம் இல்லையென்றால் அட்ரைஸ் ப்ரூப் என இரண்டில் எதாவது ஒன்றைக் கொடுத்தால் போதும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இருந்தாலும் பல உரிமையாளர்கள் எங்கு வாடகை ஒப்பந்தம் குறித்த தகவல்களைச் சமர்ப்பித்தால் தங்களுக்கு வருமான வரி குறித்து பிரச்சினை வருமோ என அஞ்சுகிறார்கள். இதனால் மாநில அரசு சலுகையை வழங்கியும் கூட வீட்டின் உரிமையாளர்களைத் தயவை எதிர்நோக்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டம் கட்டாயம் இல்லை... அதாவது இலவச மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் தாங்கள் இதில் இணையவில்லை எனக் கூறிவிடலாம். அப்படியும் ஏற்கனவே சில உரிமையாளர்கள் எழுதிக் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications