டன் டனாக கொட்டி கிடக்கும் தங்க புதையல்.. ஆனாலும் KGF மூடப்பட்டது ஏன் தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் அமைந்துள்ள கேஜிஎஃப் இப்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதை மீண்டும் திறக்க ஆய்வுகள் நடந்து வருகிறது. இது ஒரு முக்கிய கேள்வியையும் எழுப்புகிறது.. கோலார் தங்க வயலில் இன்னும் தங்கம் இருக்கும்போது, சுரங்கங்கள் ஏன் மூடப்பட்டன? இந்த கேள்விக்கான பதிலை நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் தங்க இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது நாட்டிற்கான தங்கத்தை பெரும்பாலும் இறக்குமதி செய்வதால் அந்நிய செலாவணி அழுத்தத்தில் உள்ளாகிறது. இதற்கிடையே இந்தியா தனது மிகப் பழமையான தங்கச் சுரங்கப் பகுதிகளில் ஒன்றான கோலார் தங்க வயலை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

Why KGF Shutdown despite having many ton of Gold Reserves Economic Unviability is the reason

தங்கச் சுரங்கம்

ஆனால், இந்த முறை புதிய சுரங்கங்கள் தோண்டுவதற்காக அல்ல, மாறாக அங்கிருக்கும் தங்கக் கழிவுகளிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பதே இதன் நோக்கமாகும். கர்நாடகாவின் கோலார் தங்க வயலில் உள்ள பாரத் தங்கச் சுரங்க நிறுவனம் வசம் சுமார் 33 மில்லியன் டன் தங்க வளம் மிகுந்த தாதுக் கழிவுகள் குவிந்துள்ளன. பல ஆண்டுகளாக இவை அப்படியே இருக்கிறது. இதை விரைந்து பிராசஸ் செய்து பணமாக்க வேண்டுமெனச் சுரங்க அமைச்சகத்திற்கு நாடாளுமன்றக் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

இவை தாது கழிவுகள் தான் என்றாலும் இதில் இன்றுமே கணிசமான அளவில் தங்கம் உட்பட பிற உலோகங்கள் மிக்ஸ் ஆகியிருக்கலாம் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.. அதேநேரம் இதைப் பிரித்து எடுப்பது ஈஸியானது இல்லை. இதில் இருக்கும் கெமிக்கல்கள் மற்றும் கன உலோகங்களால் சுற்றுச்சூழலுக்கும் கூட ஆபத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கோலார் தங்கச் சுரங்கம்

கோலார் தங்கச் சுரங்கம் 2001ல் மூடப்பட்டது. சுரங்க செயல்பாடுகள் பொருளாதார ரீதியாக லாபமற்றதாக மாறியதே இதற்கு முக்கிய காரணம். ஆனாலும், இந்த இடத்தை அரசு தொடர்ந்து பராமரித்து வருகிறது. உதாரணமாக, 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இதன் பராமரிப்புக்காக ₹8.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள சொத்துகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் பல்வேறு வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் தங்கக் கழிவுகளில் இருந்து தங்கத்தைப் பிரித்து எடுக்க மீண்டும் திட்டம் போட்டுள்ளனர்

இது ஒரு முக்கிய கேள்வியையும் எழுப்புகிறது.. கோலார் தங்க வயலில் இன்னும் தங்கம் இருக்கும்போது, சுரங்கங்கள் ஏன் மூடப்பட்டன? இந்த கேள்விக்கான பதிலை நாம் பார்க்கலாம். கேஜிஎஃப் ஒரு காலத்தில் இந்தியாவின் மிக உற்பத்தித்திறன் மிக்க தங்கச் சுரங்க மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. அதன் செயல்பாடுகள் அனைத்தும் பிஜிஎம்எல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டன.

கேஜிஎஃப்

ஆனால் 1990களின் பிற்பகுதியில் நிலைமை மாறியது. கேஜிஎஃப்- இல் இருந்து தங்கத்தை வெட்டியெடுப்பதற்கான செலவு என்பது விற்கப்படும் தங்கத்தின் மதிப்பை விட அதிகமாக இருந்தது. எளிதில் அணுகக்கூடிய, உயர்ந்த ரகத் தங்கம் முழுவதும் ஏற்கெனவே வெட்டியெடுக்கப்பட்டுவிட்டது. தங்க தாதுகள் மட்டுமே எஞ்சியிருந்தன. மேலும், உலகில் உள்ள மிக ஆழமான சுரங்களில் ஒன்றாகவும் கேஜிஎஃப் உள்ளது. இது செயல்பாடுகளை மேலும் சிக்கலானதாகவும், அபாயகரமானதாகவும், மிகவும் செலவு மிகுந்ததாகவும் மாற்றியது.

தொழிலாளர், எரிசக்தி மற்றும் பராமரிப்புச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சுரங்கங்களில் தங்கம் இருந்தன.. ஆனால் அதைப் பிரித்தெடுப்பதற்கான செலவுகள் அதிகமாகிவிட்டது. அவ்வளவு செலவு செய்து தங்கத்தை எடுப்பதில் லாபம் இல்லை என்பது தெளிவானது. இதனால் தான் தங்கம் இருந்த போதிலும் இந்த 'தாதுக் கழிவுகள்' அப்படியே விடப்பட்டது.

தொழில்நுட்பம்

அந்த காலத்தில் தொழில்நுட்பம் இந்தளவுக்கு மேம்பட்டதாக இல்லை. அப்போது இருந்த முறைகளைக் கொண்டு மிக நுண்ணிய தங்கத் துகள்களை மீட்க முடியவில்லை. பொருளாதார ரீதியாகவும் இப்படிச் செய்வது லாபகரமாக இருக்கவில்லை. இதனால் தங்கக் கழிவுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. இந்த தாதுக் கழிவுகள் வெறுமனே எஞ்சியிருக்கும் பாறைகள் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவையாகவும் இருக்கலாம். தங்கச் சுரங்கக் கழிவுகளில் பெரும்பாலும் கெமிக்கல் அதிகமாக இருக்கும். காலப்போக்கில், இவை நிலத்தடி நீரில் கலந்து, மண்ணை மாசுபடுத்தும்.

இப்போது தங்கம் விலை உயர்ந்துவிட்டது. அதேபோல தங்கத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பமும் மேம்பட்டுவிட்டது. இதனால் இந்த கழிவுகளில் இருந்து தங்கத்தைப் பிரித்து எடுப்பது லாபகரமாகவே இருக்கும். ஆனால் கவனமாகக் கையாளப்படாவிட்டால் இது மிகப் பெரிய சுற்றுச்சூழல் ஆபத்தையும் கூட ஏற்படுத்தலாம். எனவே இது எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+