Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிகே சிவக்குமாருக்கு செக்? கர்நாடக எதிர்க்கட்சி தலைவராக அசோக் நியமனம் ஏன்? பாஜக மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்து 6 மாதங்களுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் துணை முதல்வரான ஆர் அசோக்கை பாஜக தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் தான் அவரை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படதன் பின்னணியில் பாஜக பெரிய பிளானை போட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்று தனி மெஜாரிட்டியுடன் அரியணை ஏறியது.

Why R Ashok appointed as a Leader of Opposition in Karnataka? How BJP High command choose him? details here

இந்த தேர்தலில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மற்றவர்கள் 4 தொகுதிகளில் ஜெயித்தனர். இதையடுத்து கர்நாடகா முதல்வராக காங்கிரஸ் சார்பில் சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார்.

ஆனால் கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவரை பாஜக தேர்வு செய்யாமல் இருந்து வந்தது. கர்நாடகா பாஜகவை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் எடியூரப்பா தான் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார். ஆனால் அவர் தேர்தலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்து சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவருக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்க பாஜக மேலிடம் விரும்பவில்லை.

இத்தகைய சூழலில் தான் பிற மூத்த எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க போட்டி போட்டு வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலே சட்டசபை கூட்டம் என்பது நடந்து வந்தது. மேலும் விரைவில் பெலகாவில் கர்நாடகா குளிர்கால சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கூட்டத்தொடரில் பங்கேற்பது இல்லை என எம்எல்ஏக்கள் சிலர் கூறினர்.

இதற்கிடையே தான் நேற்று கர்நாடகா எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் துணை முதல்வரான ஆர் அசோக்கை நியமனம் செய்து பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்த நியமனத்தின் பின்னணியில் பாஜக மெகா பிளானை வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ஆர் அசோக் என்பவர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த சமுதாய மக்களின் ஓட்டு என்பது காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிக்கு தான் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், ஜேடிஎஸ் கட்சியின் தேவேகவுடா மகன் குமாரசாமி உள்ளிட்டவர்கள் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அதோடு பாஜகவை பொறுத்தமட்டில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படுவது இல்லை. பாஜகவில் எப்போதும் லிங்காயத் (எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சமுதாயம்) சமுதாயத்தை சேர்ந்தவருக்கு தான் முதல்வர் பதவி உள்பட முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சசாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதனை சரிசெய்யும் வகையில் தான் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது ஆர் அசோக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதோடு சமீபத்தில் கர்நாடகா மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமனம் செய்யப்பட்டார். எடியூரப்பா தேர்தலில் இருந்து ஒதுங்கிய நிலையில் அது பாஜகவுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை பாஜக மேலிடம் நன்கு உணர்ந்துள்ள நிலையில் தான் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவியை வழங்கி உள்ளது. இதனால் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். இத்தகைய சூழலில் தான் ஒக்கலிகரான ஆர் அசோக்கிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்து பாஜக மேலிடம் சமாதானம் செய்துள்ளது.

அதோடு அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. தற்போது ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஆர் அசோக்கிற்கு வழங்கி இருப்பதன் மூலம் கூடுதலாக ஒக்கலிகர் சமுதாய மக்களின் வாக்குகளை பெற முடியும் என பாஜக மேலிடம் கணக்கிட்டு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவராக டிகே சிவக்குமார் உள்ளார். இவர் ஒக்கலிகர் சமுதாய ஓட்டுக்களை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக அறுவடை செய்தார். டிகே சிவக்குமாருக்கு நிகரான ஒக்கலிகர் சமுதாய தலைவர் பாஜகவில் இல்லாத நிலையில் ஆர் அசோக்கிற்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. இதனால் ஆர் அசோக்கை வளர்த்து விட பாஜக நினைக்கிறது.

இதனால் தான் கடந்த சட்டசபை தேர்தலில் ஆர் அசோக் தனது சொந்த தொகுதியான பத்மநாபநகரோடு சேர்த்து டிகே சிவக்குமாருக்கு எதிராக நிறுத்தியது. இதில் கனகபுராவில் ஆர் அசோக் தோல்வியடைந்த நிலையில் பெங்களூர் பத்மநாபநகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.இவர் இந்த தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதற்கு முன்பாக அவர் உத்தரஹள்ளி தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது 6வது முறையாக அவர் எம்எல்ஏவாக தேர்வாகி உள்ள நிலையில் உள்துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவற்றின் அமைச்சராகவும், துணை முதல்வராகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இதனால் தான் ஆர் அசோக்கை பாஜக மேலிடம் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+