இன்னும் சண்டை முடியல! பதவியேற்புக்கு முன் நாளை டெல்லி பறக்கும் சித்தராமையா-சிவக்குமார்! ஏன் தெரியுமா
பெங்களூர்: டெல்லியில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டு பெரும் போராட்டத்துக்கு பிறகு சித்தராமையா முதல்வர் பதவியை பெற்றுள்ளார். டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்று பெங்களூர் புறப்பட்டுள்ள இருவரும் பதவியேற்புக்கு முன்பு நாளை மீண்டும் டெல்லிக்கு செல்ல உள்ளனர். இதன் பின்னணி என்ன என்பது தற்போது வெளியாகி உள்ளது.
தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி செய்தது. புதுச்சேரியில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பாஜக சூளுரைத்து வரும் நிலையில் கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி தென்மாநிலங்களில் இருந்து முற்றிலுமாக ‛தாமரை' கட்சியை விரட்டுவோம் என காங்கிரஸ் தெரிவித்தது.

இதையடுத்து கடந்த 10ம் தேதி கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்றது. பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இதன்மூலம் தென்மாநிலங்களில் கைவசம் இருந்த கர்நாடகாவை பாஜக இழந்தது. இதையடுத்து முதல்வர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு மாஜி முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினர். அதேபோல் நேற்று ராகுல் காந்தியை இருவரும் தனித்தனியே சந்தித்து பேசினார்.டெல்லியில் அடுத்தடுத்து நடந்த சந்திப்புகளால் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
இறுதியில் நேற்று நள்ளிரவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர். இதுதொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இதையடுத்து பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை மறுநாள் (மே 20) மதியம் 12.30 மணிக்கு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்கின்றனர்.
இந்நிலையில் தான் இன்று டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கேவை சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் ஒரே காரில் சென்று சந்தித்தனர். அதன்பிறகு மதியம் 3 மணிக்கு அவர்கள் ஒரே விமானத்தில் டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்டனர். இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்துக்கு அவர்கள் வந்திறங்க உள்ளனர்.
அதன்பிறகு இரவு 7 மணிக்கு பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவராக (முதல்வர்) சித்தராமையா தேர்வு செய்யப்பட உள்ளார். இதனை முறைப்படி டிகே சிவக்குமார் முன்மொழிவார். அதன்பிறகு ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் உரிமை கோர உள்ளனர். அதன்பிறகு நாளை மறுநாள் பெங்களூரில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாளை மீண்டும் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லிக்கு செல்கின்றனர். இதன் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையேயான முதல்வர் பதவிக்கான போட்டிக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அமைச்சரவை தொடர்பான பிரச்சனை உள்ளது.

சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகிய இருவரும் தங்களின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர். அதோடு இருவரும் முக்கிய துறைகளை தங்களின் ஆதரவாளர்களுக்கு பெற்று கொடுக்க ஆவலாக உள்ளனர். இந்த விஷயத்திலும் பிரச்சனைகள் ஏதுமின்றி சுமூகமான முறையில் தீர்வு காண காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காக தான் நாளை சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.
இதில் மின்சாரத்துறை, நீர்ப்பாசனத்துறையை டிகே சிவக்குமாருக்கு கட்சி மேலிடம் வழங்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் நகர வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, உள்துறை உள்ளிட்டவற்றை தங்களின் ஆதரவாளர்களுக்கு பெற்று கொடுக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே அடுத்தக்கட்ட மோதல் நாளை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நாளைய டெல்லி பயணத்தின் காங்கிரஸ் உள்பட பிற தோழமை கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு இருவரும் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?












Click it and Unblock the Notifications